பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெந்நீர் ஊற்றுகள்


வெள்ளை மயில்


பட்டையாகவோ இருக்கும். கண் செம் பழுப்பு நிறமாக இருக்கும்.

இந்த வெண்பிறவித் தன்மைக்குக் காரணம் என்ன தெரியுமா? நம் தோலில் உள்ள உயிரணுக்களில் கருப்பு நிறமுள்ள மிக நுண்ணிய துகள் உண்டு. இதற்கு மெலனின் (Melanin) என்று பெயர். இந்தத் துகளே நம் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. பிறவியில் ஏற்படும் சில குறைகளால் சிலருக்கு இந்த மெலனின் இருப்பதில்லை. எனவே அவர்களுடைய உடலும் ரோமமும் வெள்ளையாகத் தோன்றுகின்றன. இந்தக் குறை சிலருக்குப் பரம்பரையாகவும் தொடரக்கூடியது.

தாவரங்களிலும் சிலசமயம் வெண் பிறவித்தன்மை ஏற்படுவது உண்டு. தாவரங்கள் தம் உணவைத் தயாரித்துக் கொள்ள இலைகளிலுள்ள பச்சையம் (Chlorophyll) உதவுகிறது. பச்சையம் இல்லையெனில் இலை வெண்மையாக மாறி விடும். வயல்களில் சில வெள்ளை நாற்று களைக் காணலாம். இலைகளில் பச்சையம் இல்லாததால், உணவைத் தயாரித்துக் கொள்ள இயலாமல் அவை வாடிவிடு கின்றன.

வெந்நீர் ஊற்றுகள் (Geysers) : பூங்கா வில் நீர் உயர்ந்து எழும்படியாகச் செய்யும் செயற்கை ஊற்றுகளைப் (Fountains) பார்த்திருப்பீர்கள். இவை அழகுக்காக அமைக்கப்பட்டவை. ஆனால் சில இடங் களில் இயற்கையாகவே தரைக்கு அடியி லிருந்து இதுபோன்ற நீரூற்றுகள் வெளிப் படுவதுண்டு. இவற்றின் நீர் சூடாக இருக்கும். இவையே வெந்நீர் ஊற்றுகள்.

எரிமலைப் பகுதிகளில் இத்தகைய வெந்நீர் ஊற்றுகள் அதிகம். நியூஜீலாந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, திபெத்து ஆகிய நாடுகளில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.

75 அமெரிக்காவில் எல்லோ ஸ்ட்டோன் தேசீயப் பூங்காவிலுள்ள ஒல்டு பெய்த்புல் (Old Faithful) என்னும் வெந்நீர் ஊற்று உலகப்புகழ் பெற்றது. இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 70,000 லிட்ட ர் (15,000 காலன்) நீர் 40 மீட்டர் உயரத்திற்குப் பீச்சுகிறது. நான்கு நிமிடம் நீர் பீச்சியதும் அடங்கி விடும். மறுபடியும், ஒரு மணி நேரம் கழித்து நீர் பீறிட்டு வெளிப்படும்.

வெந்நீர் ஊற்றுகள் எவ்வாறு ஏற் படுகின்றன தெரியுமா? பூமியின் உட் பாகம் வெப்பமானது. இந்த வெப்பத் தினால் அவ்விடத்திலுள்ள பாறைகள் கூட உருகிக் குழம்பாக இருக்கும். எரி மலைகள் நிறைந்த இடங்களில் இப்பாறைக் குழம்பு, தரைக்குக்கீழே சிறிது தொலை விலேயே இருக்கும். அவ்விடங்களில் அதன் மேல் பகுதியில் சேரும் நீர் கொதித்து ஆவியாகும். ஆவியின் அழுத் தத்தினால், அங்கு இருக்கக்கூடிய துளை அல்லது வெடிப்பின் வழியாகத் தரைக்கு மேல் நீர் வெளிப்படும். மீண்டும் வெடிப்பில் நீர் நிறைந்து கொதித்து வெளிப்படுவதற்குச் சற்றுநேரமாகும். சில வெந்நீர் ஊற்றுகளில் இடைவிட்டு நீர் பீறிட்டு எழுவதற்கு இதுவே காரணம்.

வெந்நீர் ஊற்றுகளின் நீரில் பலவித மான தாது உப்புகள் கரைந்திருக்கும். இவை ஊற்றுகளின் வாயில் படிந்து, நாளடைவில் ஊற்றைச் சுற்றிக் கூம்பு போல அமைகின்றன. இத் தாது உப்புகள் உடல் நலத்திற்கு உகந்தவை; பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளவை. எனவே சில இடங்களிலுள்ள வெந்நீர் ஊற்றுகளில் மக்கள் நீராடுவ துண்டு. இமயமலையில் பத்ரிநாதர்-

அமெரிக்காவில் எல்லோஸ்டோன் தேசீயப்
பூங்காவிலுள்ள வெந்நீர் ஊற்று