பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76 வெப்பநிலை


கோயில் அருகில் இத்தகைய வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளது. குளிர் மிகுந்த ஐஸ்லாந்து நாட்டில் மக்கள் இவ் வெந்நீரைக் குழாய்கள் மூலம் வீடுகளில் செலுத்தி, வெப்ப மூட்டுவதற்குப் பயன்படுத்துகின்றனர். நியூ ஜீலாந்தில் மயோரிகள் என்ற ஆதிக் குடிகள் இவ்வெந்நீரில் சமையல் செய் கின்ற னர்.

வெப்பநிலை (Temperature) : வெயில் அதிகமாகக் காய்கிறது; இரவில் மிகக் குளிராக இருக்கிறது எனப் பொதுவாகக் கூறுகிறோம். துல்லியமாக அளந்து கூறு வதுதான் வெப்பநிலை. ஒரு பொருளின் வெப்பநிலை என்பது, அப்பொருள் எவ் வளவு சூடாக உள்ளது அல்லது எவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது என்பதைக் குறிக்கும்.

சூடான ஒரு பொருளையும், குளிர்ச்சி யான மற்றொரு பொருளையும் ஒன்றோ டொன்று தொடும்படி இணைத்து வைத் தால் இரண்டின் வெப்பநிலையும் சிறிது நேரத்தில் சமமாகிவிடும். அதிக வெப்ப நிலையிலுள்ள பொருளின் வெப்பம், குறைந்த வெப்பநிலையிலுள்ள பொரு ளுக்குப் போய்விடும். தண்ணீர் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்குப் பாய் கிறது; கீழ் மட்டத்திலிருந்து மேலே செல்லாது. அதுபோலவே, வெப்பமும் உயர் வெப்பநிலையிலுள்ள பொருளி லிருந்து தாழ் வெப்பநிலையிலுள்ள பொரு ளுக்குச் செல்லும். தாழ் வெப்பநிலைப் பொருளிலிருந்து உயர் வெப்பநிலைப் பொருளுக்குச் செல்லாது. இருவேறு பொருள்கள் ஒரே வெப்பநிலையிலிருந்தால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வெப்பம் செல்லாது.

வெப்பநிலைகளை அளக்கும் கருவிக்கு வெப்பமானி (த.க.) என்று பெயர். இதில் பலவகை உண்டு. மிக உயர் வெப்பநிலைகளையும் தாழ் வெப்பநிலை களையும் அளப்பதற்கு வேறுசில சாதனங் கள் உள்ளன.

வெப்பநிலைகளை அளக்க சென்டி கிரேடு, பாரன்ஹீ ட் (த.க.), ரேயம்யுர் என்று வெவ்வேறு அளவை முறைகள் உண்டு. விஞ்ஞானத் துறையிலும், மெட்ரிக் முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகளிலும் சென்டிகிரேடு அளவை முறை பின்பற்றப்படுகிறது. உடல் வெப்ப நிலையை அளக்கவும், காலநிலை (Weather) பற்றிய விவரங்களுக்கும் பாரன்ஹீட் அளவை பின்பற்றப்படுகிறது. பாரன் ஹீட் முறையில் வெப்பநிலைகளைக் குறிக் கும்போது, அந்த எண்ணுடன் 'பா' --வெப்பம்

வெப்பமானியைக் கொண்டு உடல்
வெப்பநிலையை மருத்துவர் அளவிடுகிறார்

என்ற எழுத்தையும் சேர்ப்பார்கள். ரேயம்யுர் அளவை இப்போது வழக்கில் இல்லை .

நமக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டறிய மருத்துவர் நம் உடல் வெப்ப நிலையை அளக்கிறார் அல்லவா? சாதாரண மாக நம் உடல் வெப்பநிலை எந்தச் சூழ் நிலையிலும் 98.4° பா. ஆக இருக்கும். காய்ச்சல் இருந்தால் வெப்பநிலை இதை விட அதிகமாக இருக்கும். பார்க்க: வெப்பம்; வெப்பமானி.

வெப்பம் : நிலக்கரியை எரித்துப் பெறும் வெப்பத்தால் நீராவி உற்பத்தி செய்து நீராவி எஞ்சினை இயக்குகிறார்கள். பெட்ரோல், டீசல் எண்ணெய் முதலிய எரிபொருள்களை எரித்துப் பெறும் வெப்பத்தால் மோட்டார் வண்டிகள் ஓடு கின்றன. இன்னும் பல்வேறு எந்தி ரங்கள் வெப்பத்தின் சக்தியால் இயங்கு கின்றன. மின்சக்தி, அணுசக்தி போன்று வெப்பமும் ஒருவகைச் சக்தியாகும்.

எந்திரங்களை இயக்குவதற்கும், உலோகவேலைகளிலும், ரசாயனப் பரி சோதனைகளிலும், சமையல் வேலையிலும் வெப்பசக்தி மிக முக்கியமாக விளங்கு கிறது. பெருமளவு வெப்பம் இயற்கையில் சூரியனிடமிருந்தே கிடைக்கிறது. பொருள்கள் எரிவதாலும் வெப்பம் உண்டாகிறது. மின்சாரம் பாய்வதால் சில பொருள்களில் வெப்பம் உண்டா கிறது. கைகளை ஒன்றோடொன்று தேய்த் தால் சூடு பிறக்கிறதல்லவா? அது போன்றே உராய்வினாலும் (Friction, த.க.) வெப்பம் உண்டாகிறது.

வெப்பம் வேறு, வெப்பநிலை (த.க.) வேறு. வெப்பநிலை என்பது ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்