பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்பம் 77


வெப்பம் என்பது, அந்தப் பொருளி லுள்ள சக்தியின் அளவாகும். ஒரு சிறு குவளையிலும், ஒரு பெரிய கலத்திலும் தண்ணீரை நிரப்புவோம். குவளையிலுள்ள தண்ணீரை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்குச் சூடாக்கச் சிறிய அளவு வெப்பம் போதுமானது. ஆனால் கலத்திலுள்ள தண்ணீரை அதே வெப்பநிலைக்குச் சூடாக்க அந்த அளவு வெப்பம் போதாது. அதிக நேரம் சூடுபடுத்த வேண்டும் அல்லது அதிக எரிபொருள்கள் வேண்டும். அதில் அதிக வெப்பம் சேருகிறது. இதிலிருந்து வெப்பமும் வெப்பநிலையும் வேறுவேறு என அறியலாம்.

வெப்பநிலை இத்தனை டிகிரி என்று குறிப்பிடுகிறோம். வெப்பத்தை அளவிடு வதற்கான அலகு 'காலரி' என்பதாகும். ஒரு கிராம் எடையுள்ள நீரின் வெப்ப நிலையே மேலும் ஒரு டிகிரி (சென்டி கிரேடு) உயர்த்தத் தேவைப்படும் வெப்பமே ஒரு காலரி எனப்படுகிறது.

வெப்பத்தினால் பொருள்களில் பல மாறுதல்கள் ஏற்படக்கூடும். வெப்பத் தினால் வெப்பநிலை உயர்ந்து திடப் பொருள் உருகித் திரவமாகும்; திரவம் ஆவியாகும். பொருள்கள் ரசாயன மாறு தல் அடையக்கூடும். எடுத்துக்காட்டாக, இரும்புப் பொடியையும் கந்தகப் பொடி யையும் கலந்து சூடுபடுத்தினால் முற்றிலும் புதிய தன்மைகளையுடைய இரும்பு சல் பைடு என்னும் கூட்டுப்பொருள் (த.க.) உண்டாகும். திட, திரவ, வாயு நிலையி லுள்ள எல்லாப் பொருள்களும் பெரும் பாலும் வெப்பத்தால் விரிவடைகின்றன. இதை விளக்கமாகப் படத்தில் காணலாம். இதற்காகவே ரெயில் தண்டவாளங்களை இடையிடையே சிறிது இடைவெளி விட்டுப் பொருத்துகிறார்கள். கோடை காலத்தில் இவை வெப்பத்தால் விரி வடைந்து நீள்வதற்கு இந்த இடை வெளிகள் இடம் தருகின்றன. இவை இல்லையென்றால் தண்டவாளங்கள் நீள் வதற்கு இடமின்றி வளைந்துவிடும். திர வங்களும் வெப்பத்தால் பெருக்கமடை கின்றன. இதன் அடிப்படையில்தான் வெப்பநிலைகளை அளக்க உதவும் வெப்ப மானிகள் (த.க.) அமைந்துள்ளன. வாயு மண்டலத்தில் வெப்பத்தால் ஏற்படும் மாறுதல்களாலேயே பருவக்காற்றுகள் (த.க.) உண்டாகின்றன.

வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீசல் என மூன்று வழிகளில் வெப்பம் பரவுகிறது. ஓர் இரும்புக் கம்பி யின் ஒரு முனையை நெருப்பில் காட்டினால் அந்த முனையிலுள்ள மூலக்கூறு (த.க.) வெப்பத்தைப் பெற்று, அதை அதற்கு


வெப்பத்தினால் திட, திரவ, வாயு நிலையிலுள்ள பொருள்கள் விரிவடைவதை விளக்கும் படங்கள் கத்தினால் வெப்பநிலை சென்றுவிடு

வளையத்தினுள் சரியாக நுழையக்கூடிய அளவில் உள்ளது உலோகத்தாலான பந்து. இதைச் சிறிது நேரம் சூடுபடுத்தினால்

அது வெப்பத்தினால் பெருக்கமடைந்து வளையத்தினுள் நுழையாது. சிறிது நேரத்தில் பந்தின் வெப்பநிலை குறைந்து பழைய அளவுக்குச் சுருங்கியவுடன் அது வளையத்தினுள் சென்றுவிடும். திடப்பொருள் களை விட, திரவநிலையிலுள்ள பொருள்கள் அதிகமாகப் பெருக்க மடைகின்றன. ஒரு கண்ணாடிக் குடுவையில் சாயம் கலந்த நீரை விட்டு, மேலே அடைப்பானில் ஒரு கண்ணாடிக் குழாயைப் பொருத்துவோம். குழாயில் நீர்மட்டத்தைக் குறிக்க அங்கு ஒரு நூலைக் கட்டிவைக்கலாம். குடுவையைச் சூடுபடுத்தினால், குழாயில் நீர்மட்டம் சிறிது கீழிரங்கி, பின்னர் மேலே ஏறும். இது ஏனெனில், வெப்பத்தால் முதலில் குடுவை விரிவடைந்து, அதன் கொள்ளளவு


அதிகமாகிறது. நீர்மட்டம் சிறிது இறங்குகிறது. பின்னர் வெப் பத்தை நீர் ஏற்று விரிவடைந்து நீர்மட்டம் உயருகிறது. திரவ நிலையிலுள்ள பொருள்களை விட வாயுநிலையிலுள்ளவை எளிதில், அதிக அளவில் பெருக்கமடைகின்றன. ஒரு வெற்றுக் குடுவையில் ஒரு கண்ணாடிக் குழாயைச் செலுத்தி, அதைக் கவிழ்த்து. நீர் அடங்கிய ஒரு கலத்தில் நுழைப்போம். ஒரு விளக்கினால் குடுவையைச் சூடுபடுத்தினால், அதிலுள்ள காற்று விரிவடைந்து, நீரின் வழியே காற்றுக் குமிழிகள் வெளியேறுவதைக் காணலாம். குடுவையைக் குளிரவைத்தால் கண்ணாடிக் குழாய் வழியே நீர் ஏறு வதையும் காணலாம். விளக்கிற்குப் பதிலாக, நம் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று நன்கு தேய்த்துப் பின் குடுவையைப் பிடித்தாலும், கைகளின் உராய்வினால் உண்டாகும் வெப்பத்தால் காற்றுக் குமிழி கள் வெளியேறும்.