பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்பம் - வெ அடுத்துள்ள மூலக்கூற்றுக்கு அளிக்கிறது. இவ்வாறு வெப்பம் படிப்படியாகக் கடத்தப்பட்டு இரும்புக் கம்பியின் மற்றொரு முனையைச் சிறிது நேரத்தில் அடைகிறது. அதனால் அதைப் பிடித் திருக்கும் நம் கை சுடுகிறது. இதுவே வெப்பக்கடத்தல். பெரும்பாலும் திடப் பொருள்களில் இவ்வாறே வெப்பம் பரவுகிறது. இரும்பு மட்டுமின்றிப் பெரும்பாலும் எல்லா உலோகங்களும் வெப்பத்தை நன்கு கடத்துகின்றன.இவற்றுக்கு 'எளிதில் கடத்திகள்' என்று பெயர். பிளாஸ்ட்டிக், கண்ணாடி, மரம், தக்கை முதலியனவும், திரவங்களும் வாயுக்களும் வெப்பத்தை நன்கு கடத்துவதில்லை. இவற்றை 'அரிதில் கடத்திகள்' என்பர். பாதரசம் திரவநிலையிலிருந்தாலும் அது ஓர் உலோகமாகையால் வெப்பத்தை அது நன்கு கடத்தும். திரவங்களிலும் வாயுக்களிலும் வெப்பச் சலனம் என்னும் முறையில் வெப்பம் பரவுகிறது. நீர் அடங்கிய ஒரு கண்ணாடிக் குடுவையைச் சூடுபடுத்தி னால், அடிமட்டத்திலுள்ள நீர் வெப்ப மடைந்து மேலே போகிறது. மேல்மட்டத் திலுள்ள குளிர்ந்த நீர் கீழ்நோக்கி வந்து சூடடைந்து மேலே செல்கிறது. தொடர்ந்து இவ்வாறு நடைபெற்று, வெப்பநிலை உயருகிறது. ஒரு பொருளி லுள்ள மூலக்கூறுகள் யாவும் இவ்வாறு நகர்ந்து நகர்ந்து வெப்பமடைவதே வெப்பச் சலனம். குளிர்காலத்தில் தீ மூட்டி நெருப்பைச் சுற்றியமர்ந்து குளிர் காய்வதுண்டு. இதில் நெருப்பிலிருந்து நம் உடலுக்கு வெப்பம் பரவும் முறை வெப்பக் கதிர் வீசல் ஆகும். இடையிலுள்ள காற்றுக்கு வெப்பம் ஊட்டாமல் நேரே நம்மை வந்தடைகிறது வெப்பம். சூரியனிட மிருந்து பூமிக்கு வெப்பம் வருவதும் இம்முறையில் தான். வெப்பம் இல்லாவிட்டால் குளிர்ச்சி யாக இருக்கும். ஒரு பொருளைக் குளிர்ப் படுத்துகிறோம் என்றால், உண்மையில் அதிலிருந்து வெப்பத்தைத்தான் வெளி யேற்றுகிறோம். குளிர்ப்பதனப் பெட்டியில் இவ்வாறே நடைபெறுகிறது. சூடான பொருள்களைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருள்களைக் குளிர்ச்சியாகவும் வைத் திருக்க வெற்றிடக் குப்பியைப் (Thermos flask) பயன்படுத்துகிறோம் அல்லவா? இது செயல்பட, இதனுள்ளிருந்து வெப்பம் வெளியேறக்கூடாது; வெளியி லிருந்தும் வெப்பம் உள்ளே செல்லக் கூடாது. வெப்பம் மூன்று வழிகளில் பப்பமண்ட லம் பரவும் அல்லவா? இவற்றுள் எந்த வழியிலும் வெப்பம் பரவாத வகையில் வெற்றிடக்குப்பி செய்யப்படுகிறது. எனவே இதில் வைக்கப்படும் பொருள்கள் பல மணி நேரத்திற்கு வெப்பநிலை மாறா மல் இருக்கின்றன. வெற்றிடக்குப்பி பற்றித் தனிக்கட்டுரை உள்ளது. பார்க்க : எரிபொருள்கள்; உலைகள்; குளிர்ப்பதனப் பெட்டி; சக்தி; சூரியன்; வெப்பநிலை; வெப்பமானி. வெப்பமண்ட லம் (Tropics) : சூரியனிட மிருந்து நமக்கு வெப்பம் கிடைக் கிறது. ஆனால் பூமியில் எல்லாப் பகுதி களுக்கும் ஒரே அளவிலான வெப்பம் கிடைப்பதில்லை. சில பகுதிகளில் வெப்பம் அதிகமாகவும் சில பகுதிகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது. சூரியனின் கதிர்கள் செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ பூமியில் விழுவதுதான் இதற்குக் காரணம். எடுத்துக்காட்டாக, ஒவ்வோராண்டும் மார்ச் 21, செப்டெம்பர் 23 ஆகிய இரு நாட்களில் பூமத்திய ரேகைக்குச் செங்குத்தாகச் சூரியன் தோன்றுகிறது. பூமத்திய ரேகைக்கு வடக்கில் 231 டிகிரியிலுள்ள கடக ரேகை மீது ஜூன் 21ஆம் நாளன்றும், தெற்கில் 231 டிகிரியிலுள்ள மகர ரேகை மீது டிசம்பர் 22ஆம் நாளன்றும் சூரியன் தோன்றுகிறது. கடக ரேகைக்கு வடக்கி லுள்ள பகுதிகளிலும், மகர ரேகைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளிலும் சூரியன் செங்குத்தாகத் தோன்றுவதே இல்லை. எனவே இவ்விரு ரேகைகளுக்கும் இடைப் பட்ட பகுதியில் தான் எந்த ஒரு நாளிலும் சூரியன் தலைக்கு நேராகத் தோன்றக்கூடும். ஆகவே இப்பகுதியில் வெப்பம் அதிகம். இப்பகுதியே வெப்ப மண்டலம் எனப்படும். மற்ற பகுதிகளில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவ தால் வெப்பம் குறைவு. இது மிதவெப்ப மண்ட லம் (Temperate zone) எனப்படும். வெப்பமண்டலத்தில் வெப்பம் அதிக மாக இருப்பதுடன் மழையும் மிகுதி யாகப் பெய்கிறது. இதன் காரணமாக, வெப்பமண்டலத்தில் அடர்ந்த காடுகள் வளர்ந்துள்ளன. தென் அமெரிக்காவில் ஆமெசான் ஆற்றுப் பகுதியிலும், ஆப் பிரிக்காவில் காங்கோ ஆற்றுப் பகுதியிலும், ஆசியாவில் மலேசியா, இந்தோனீசியா நாடுகளிலும் உள்ள காடுகள் இவற்றுள் முக்கியமானவை. மிக இருண்ட இக்காடு களை மனிதனால் இன்னும் முற்றிலுமாக ஆராய முடியவில்லை. இக்காடுகளில் உள்ள தேக்கு, ரப்பர், கோக்கோ முத லியவை மிகப் பயனுள்ளவை. பனைமரக்