பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்பபமானி

உச்ச நீச வெப்பமானி


ஒரு நாளில் வெப்பநிலையின் மிக அதிக அளவையும், அதே நாளில் அதன் குறைந்த அளவையும் இந்த வெப்பமானி காட்டும். இந்த வெப்பமானியில் பாதரசமும் - ஆல்கஹாலும் இருக்கும். ஓரத்திலுள்ள இரு புயங்களிலும் பாதரச மட்டத்திற்கு மேலே எஃகினா லான காட்டிகள் உண்டு. ஓரங்களில் குறித்துள்ள வெப்பநிலையை இவை காட்டும்.

*வெப்பநிலை உயர்வுக் கேற்ப, நடுவிலுள்ள புயத்தில் ஆல்கஹால் விரிவடைவதால் வலது புயத்தில் பாதரச மட்டம் உயர்ந்து அங்குள்ள எஃகுக்காட்டியை மேலே தள்ளும். வெப்பநிலை குறையும் பொழுது, ஆல்கஹால் சுருங்குவதால் இடது புயத்தி லுள்ள பாதரசமட்டம் உயர்ந்து அங்குள்ள எஃகுக் காட்டியை மேலே தள்ளு கிறது. எஃகுக் காட்டிகள் தாமாகக் கீழிறங்குவதில்லை. அவை உயர்த்தப்பட்ட இடத் திலேயே நிற்கும். எனவே எஃகுக்காட்டிகள் குறிக்கும் அளவுகளைப் பார்த்து ஒரு நாளின் உச்ச நீச வெப்ப நிலைகளை அறிந்து கொள்ள லாம். பின்னர் எஃகுக் காட்டிகளை ஒரு காந்தத்தைக் கொண்டு பாதரச மட்டத்திற்கு இறக்கி விடலாம். 

வெப்பநிலைகளைக் குறிக்கும் போது அவை எந்த அளவை முறையைச் சேர்ந்தவை என்று தெரிய வேண்டு மல்லவா? சென்டிகிரேடு அளவையைக் குறிக்க டிகிரிக்கான குறியுடன் C என்ற எழுத்தையும், பாரன்ஹீட் அள வையைக் குறிக்க F என்ற எழுத்தையும் சேர்ப்பார்கள். கலைக்களஞ்சியத்தைப் பொறுத்தவரை குறி மட்டும் இருந்தால் அது சென்டிகிரேடு அளவையையும், அந்தக் குறியுடன் 'பா' என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது பாரன்ஹீட் அளவையையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

பாரன்ஹீட் வெப்பமானிகளில் 32° முதல் 212 வரை அளவுகள் குறிக்கப் பட்டிருக்கும்.சென்டிகிரேடு வெப்ப மானிகளில் 0 முதல் 100 வரை குறிக் கப்பட்டிருக்கும். ஆனால் மருத்துவர் பயன்படுத்தும் சிறிய வெப்பமானியில் 95 பா. முதல் 110 பா. வரையில் தான் அளவுகள் இருக்கும். ஏனெனில் நம் உடல் வெப்பநிலை இந்த இரு எல்லை களுக்கிடையில் தான் இருக்க முடியும்.

பொதுவாக நம் உடல் வெப்ப நிலை 98.4 பா. ஆகும். இந்த வெப்பமானியின் குமிழை வாய்க்குள் வைத்தவுடன் குழா யில் பாதரசம் ஏறுகிறது. ஒரு நிமி டத்திற்குப் பின் மருத்துவர் வெப்ப மானியை வெளியே எடுத்துப் பார்க்கும் போது பாதரசம் சுருங்கிக் குமிழுக்குள் இறங்கிவிடக்கூடாது அல்லவா? இதற் காக இந்த வெப்பமானியில் குமிழுக்கும் குழாய்க்கும் இடையில் பாதரசம் செல் வதற்குக் குறுகிய, சற்று வளைவான இடைவெளிதான் இருக்கும். வெப்பத்தில் விரிவடைந்து இதன்வழியாகச் செல்லும் பாதரசம் தானாக மீண்டும் கீழிறங்காது. வெப்பநிலையைக் குறித்துக்கொண்டபின் இதை நீரில் கழுவி நன்றாக உதறினால் தான் பாதரசம் குமிழினுள் இறங்கும். இதை வெந்நீரில் கழுவக்கூடாது. ஏனெ னில் வெந்நீரின் வெப்பநிலை 110 பா.க்கு மேல் இருக்கக்கூடும். அதன் வெப்பத் தால் பாதரசம் 110 பா.க்கு மேல் விரிவடைய இடமின்றி வெப்பமானி வெடித்துவிடும்.

முதன்முதலில் வெப்பமானிகளில் ஆல்க ஹால் பயன்படுத்தப்பட்டது. ஆல்கஹால் 78° வெப்பநிலையில் கொதிக்கத் தொடங்கி விடும். ஆகையால் அதிக வெப்பநிலை களை அளக்க முடியவில்லை. அதற்குப் பதிலாகப் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பாரன்ஹீட். பாத ரசம் 357 யில்தான் கொதிக்கத் தொடங் கும். -40° யில் உறையும். ஆல்கஹால் -112 வரை உறையாமல் திரவ நிலையி லேயே இருக்கும். ஆகையால் குளிர் மிகுந்த துருவப் பகுதிகளில் ஆல்கஹால் கொண்ட வெப்பமானிகள் பயன்படு கின்றன.

ஒரு நாளில் வெப்பநிலையின் மிக அதிக அளவையும், அதே நாளில் அதன் குறைந்த அளவையும் காட்டுவது உச்ச நீச வெப்பமானி. இதைப் படத்தில் காண லாம். உலோகச் சுருள்களைக் கொண்ட ஒருவகை வெப்பமானிகளும் இன்று உள்ளன. இந்தச் சுருளின் ஒரு முனை பொருத்தப்பட்டிருக்கும். மற்றொரு முனை யுடன் ஒரு முள் இணைந்திருக்கும். வெப்பத்தினால் உலோகச் சுருள் விரி வடையும்போது, முள் நகரும். மேலே யுள்ள வட்ட முகப்பில் வெப்பநிலைகளை இந்த முள் காட்டும். முள்ளின் முனையில் ஒரு பேனாவைப் பொருத்தி, ஒரு காகிதச் சுருளிலிருந்து வரும் காகிதத் தில் மணி, நேரக் கணக்குடன் வெப்ப நிலையைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யும் வகையிலும் வெப்பமானிகள் உண்டு .