பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெள்ளம்


றார்கள். நிழல் மிக்க வட சரிவுகளில் குடியேற யாரும் விரும்புவதில்லை.

நோயைக் குணப்படுத்தும் ஆற்ற லுடையது வெயில். மனித உடலிலும் விலங்குகளின் உடலிலும் வெயில் பட்டால் தோலில் D வைட்டமின் உண்டாகும். எலும்பு வளர்ச்சிக்கு இந்த D வைட்ட மின் அவசியம். தாவரங்களில் வெயில் பட்டால் A வைட்டமின் உண்டாகும். உடலை வளர்க்கவும், உடலில் தொற் றுக்கள் சேராமல் தடுக்கவும், கண் பார்வை சரியாக இருக்கவும் A வைட்டமின் தேவை. மித வெப்ப நாடுகளில் வெயிலின் ஆற்றல் குறைவு. எனவே அங்குள்ள தாவரங்களில் A வைட்டமின் குறைவாக உள்ளது. அங் குள்ள மக்களும் A வைட்டமின் குறைந்த வர்களாக உள்ளனர். இந்த வைட்டமின் குறைவை அவர்கள் வேறு வகைகளில் ஈடு செய்து கொள்கிறார்கள்.

மரத்திலும் நிலக்கரியிலும் அடங்கி யுள்ள வெப்ப சக்தியை மனிதன் பயன் படுத்திக்கொள்கிறான். இவ்வாறு பயன் படுத்துவதற்குப் பதிலாக, சூரிய ஊதுலை களைப் பயன்படுத்தி, வெயிலை நேரடி யாகவே சக்தியாக மாற்றுவதற்கு விஞ் ஞானிகள் முயன்று வருகிறார்கள்.

வெள்ளம் : பெரும் மழை பெய்தால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, இரு கரை களின் உயரத்திற்குமேல் நீர் பெருகி ஓடும். அப்பொழுது பெருக்கெடுக்கும் நீர் , கரைகளைத் தாண்டி வழிந்து நிலப் பகுதிகளுக்குள் புகுந்துவிடும். இதை வெள்ளம் என்கிறோம்.

மழை மட்டுமின்றி வேறு பல காரணங்க ளினாலும் வெள்ளம் உண்டாகிறது. புயல் காற்றினால் பெருமழை வரலாம்; அதனால் புயலே வெள்ளத்திற்குக் கார ணமாக இருப்பதுண்டு. பெருமளவில் பனிக்கட்டிகள் உருகி ஆற்றில் நீர் பெருகுவதாலும் வெள்ளம் உண்டாக லாம். கடலில் பெரும்புயல் உண்டாவ தாலும், கடலில் அடித்தளத்தில் நில நடுக்கம் ஏற்படுவதாலும் கடல் நீர் கொந்தளித்து மிக உயரமாக எழுந்து, கரையோரமுள்ள நிலப்பகுதிகளுக்குள் வெள்ளமாகப் பாய்வதுண்டு. கடற்கரை யோரமாக அணைகரை (Dyke) உடைவ தாலும் வெள்ளப்பெருக்கு உண்டாகலாம்.

வெள்ளத்தினால் மிகுந்த சேதம் விளையும். வீடுகளையும் பாலங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிடும்; சாலைகளை அரித்துவிடும்; கால்நடைகளும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சாலை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சாலை

மக்களும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கி விடுவதுண்டு. பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகிவிடும். வளமான மண்ணை வெள்ளம் அரித்துச் சென்றுவிடுவதால், விளைநிலங்கள் பாழாகிவிடும்.

வெள்ளச் சேதங்களைத் தடுப்பதற்குப் பல வழிகள் கையாளப்படுகின்றன. ஆறுகளின் கரைகள் வெறுந் தரையாக இருந்தால், வெள்ள நீர் தங்குதடை யில்லாமல் அதிகவேகத்தில் ஓடி நிலப் பகுதிகளுக்குள் புகுந்துவிடும். கரை யோரங்களில் காடுகள் இருக்குமானால், அவை நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். அக் காடுகள் இயற்கை அரண்களாக அமையும். எனவே, கரையோரங்களி லுள்ள காடுகளை அழிக்கக்கூடாது. காடுகள் இல்லாத ஆறுகளின் கரை யோரங்களில் மரங்களை வளர்க்கலாம்.

வெள்ளத்தால் ஏற்படும் சேதம் நீர் மட்டம் உயர்வதைப் பொறுத்திருக் கிறது. எனவே ஆற்றில் நீரோடும் பகுதியைச் சற்று ஆழமாக்கித் துப்புரவு செய்வதின் மூலம் நீர்மட்டத்தைக் குறைத்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்து கிறார்கள். நீர்த்தேக்கங்கள் அமைத்து வெள்ள நீரைத் தடுத்துத் தேக்கி, பல கால்வாய்களில் விடுவதன் மூலமாகவும் வெள்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இந்தியாவில் பீகார் மாநிலத்திலுள்ள தாமோதர் அணைத் திட்டமும், ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள ஹீராக்குட் அணைத்