பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெப்பப் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீசல் என்ற மூன்று வழிகளில் வெப்பம் பரவுகிறது. வெற்றிடக் குப்பியில், கண்ணாடியும் தக்கையும் வெப்பக் கடத்தலைத் தடுக்கின்றன. கண்ணாடிச் சுவர்களுக்கு இடையிலுள்ள வெற்றிடம் வெப்பச் சலனத்தைத் தடுக்கிறது. கண்ணாடிச் சுவர்களினுள் கொடுக்கப்பட்டுள்ள பளப்பான பூச்சு, வெப்பக் கதிர்வீசலைத் தடுக்கிறது. இவ்வாறு எந்த வழியிலும் வெப்பம் உட்செல்லவோ வெளியேறவோ முடியாதபடி வற்றிடக் குப்பி அமைந்துள்ளது.


சூடான திரவத்தை இக்குப்பியினுள் ஊற்றி, தக்கையால் இறுக மூடி வைத்து விட்டால், வெப்பம் உள்ளிருந்து எந்த முறையிலும் வெளியேறாது. தக்கையும் கண்ணாடியும் வெப்பத்தை எளிதில் கடத்துவதில்லை. வெற்றிடம் வழியாக வெப்பம் சிறிதும் கடப்பதில்லை. குப்பியின் கண்ணாடிச் சுவர்கள் வெள்ளிபோல் பள பளப்பான அலுமினியம் கரைசலைக் கொண்டு பூசப்பட்டிருக்கின்றன. இதுவும் வெப்பம் வெளியேறாதிருக்க உதவுகிறது. எனவே, குப்பியினுள் வைக்கப்படும் சூடான திரவம் வெப்பத்தை இழக்காமல் பல மணி நேரம் வரை சூடாகவே இருக்கிறது. குப்பியிலுள்ள அமைப்புகள், உள்ளி ருந்து வெப்பத்தை வெளியேறாமல் தடுப் பதுபோலவே, வெளியிலிருந்து வெப்பம் உள்ளே நுழையாமலும் தடுக்கின்றன. எனவே, வெற்றிடக்குப்பியில் பனிக்கட்டி, ஐஸ்கிரீம் முதலிய குளிர்ந்த பொருள் களையும் நெடுநேரம் குளிர்ச்சியாக இருக் கும்படி பாதுகாக்கலாம்.

வெற்றிடம் (Vacuum) : காலியான ஒரு பாத்திரத்தைக் காட்டி, அதில் என்ன இருக்கிறது என்று கேட்டால், 'ஒன்றுமில்லை' என்று சிலர் சொல்லு வார்கள். ஆனால் அதில் காற்று இருக் கிறது. காற்று என்பது பல வாயுக்கள் அடங்கிய கலவை. இந்தக் காற்று இல்லாத காலி இடத்திற்கு 'வெற்றிடம்' என்று பெயர்.

இதுவரை எவரும் முழுமையான வெற்றிடத்தை உண்டாக்கியதில்லை.

ஏனென்றால், வெற்றிடத்தை உண்டாக்கக் காற்றை முற்றிலும் வெளியேற்றிவிட வேண்டும். ஆனால், எந்த ஓர் இடத்தி லிருந்தும் காற்றை முழுமையாக அகற்றி விட இயலாது. நன்கு மூடப்பட்ட ஒரு கொள்கலத்திலிருந்து காற்றை எவ்வளவு தான் அகற்றினாலும், அதில் காற்றில் அடங்கியுள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சிறிதளவேனும் இருக்கும். ஆகவே, நடைமுறையில் காற்று அல்லது வாயுவின் பெரும்பகுதி அகற்றப்பட்டு, அழுத்தம் மிகமிகக் குறைவாக உள்ள இடமே வெற்றிடம் எனப்படுகிறது. வெளிப்புறக் காற்றின் அழுத்தத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவான அழுத்தமுள்ள ஓரிடம் வெற்றிடம் எனக் கொள்ளப்படுகிறது. ஒரு கொள்கலத்திலிருந்து காற்றை வெளியேற்றுவதற்கு வெற்றிடப் பம்ப்பு (Vacuum pump) என்னும் சாதனம் பயன்படு கிறது. ஆட்டோ வான் குவெரிக் (Otto von Guericke) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 300 ஆண்டுகளுக்குமுன் இதை அமைத்தார். கண்ணாடியினாலான மணிஜாடியிலிருந்து காற்றை அகற்ற இது உதவுகிறது. மணிஜாடியினுள் உள்ள பலூனில் சிறி தளவு காற்று உள்ளது. மணி ஜாடியி லிருந்து காற்றை வெளியேற்ற வெளி யேற்ற, பலூனிலுள்ள காற்று விரி வடைந்து அதை உப்பும்படி செய்கிறது. வெற்றிடம், வெப்பத்தைக் கடத்தாது. இத்தத்துவம் வெற்றிடக் குப்பியில் (த.க.) பயனாகின்றது. ஒலியையும் வெற்றிடம் கடத்துவதில்லை. எனவே,