பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86 வெனிசூலா

வெற்றிடத்தில் எவ்வளவு ஒலியை உண்டாக்கினாலும் அதை நாம் கேட்க முடியாது.

விமானம் ஓடும்பொழுது, அதன் மேற் பரப்பில் குறைந்த காற்றழுத்தமுள்ள வெற்றிடம் உண்டாகிறது. அந்த வகை யில் விமானத்தின் அமைப்பு உள்ளது. அதனால் விமானத்தின் அடிப்புறத்தில் செயல்படும் காற்றின் மேல் நோக்கிய அழுத்தம், விமானம் உயரே எழும்பவும் வானில் பறக்கவும் உதவுகிறது. வெற் றிடத்திற்குள் நீரோ அல்லது வேறு திரவங்களோ உடனே புகுந்து அவ் விடத்தை நிரப்பிக்கொள்ளும். வீடுகளில் நீர் இறைக்கப் பயன்படும் பம்ப்பு (த.க.). மண்ணெண்ணெய் இறைக்கப் பயன்படும் கருவி, டயர்களில் காற்றடைக்க உதவும் பம்ப்பு ஆகியவற்றில் இந்தத் தத்துவம் பயன்படுகின்றது.

குளிர் பானங்களைக் குடிக்க ஒரு சிறு குழாயைப் (Straw) பயன்படுத்துகிறோம் அல்லவா? இக்குழாயின் ஒரு நுனியைக் குவளையில் வைத்து, அதன் மற்றொரு நுனி வழியாக உறிஞ்சும்பொழுது, குழாயிலுள்ள காற்றை நாம் இழுத்துக் கொள்ள, அங்கு அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. எனவே குவளையிலுள்ள பானத்தின் மேற்பரப்பில் செயல்படும் காற்றின் அழுத்தத்தால், பானம் குழாய் வழியே வெற்றிடத்தில் நிரம்புகிறது. தொடர்ந்து உறிஞ்ச, பானம் வாய்க்குள் செல்கிறது.


வெனிசூலா : தென் அமெரிக்காக் கண்டத்தின் வட பகுதியிலுள்ள நாடு வெனிசூலா. இந்நாட்டின் பழங்குடிகளான சிவப்பிந்தியர்கள், நீரில் மரத் ஊன்றி தூண்களை அவற்றின் மீது குடிசைகள் அமைப்பது வழக்கம். இங்குக் குடியேறிய ஸ்பானியர்கள் இக்காட்சியைப் பார்த்தபோது, பித்தாரிய நகரான வெனிஸ் போல விளங்குவதை உணர்ந் தனர். எனவே 'சிறிய வெனிஸ்' என்னும் பொருள்படும் 'வெனிசூலா' என்று பெயரிட்டனர். இதுவே பின்னர் நாடு முழுவதற்கும் பெயராக அமைந்தது. நாட்டின் பரப்பு 9,15,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 10 லட்சம். வடக்கில் கரிபியன் கடலி லுள்ள சுமார் 70 தீவுகளும் இந்நாட்டில் அடங்கும். தலைநகர் கராக்கஸ் (Caracas).

இந்நாட்டின் கிழக்கு, மேற்குப் பகுதி கள் மலைப்பாங்கானவை. ஆண்டீஸ் மலைத் தொடரைச் சேர்ந்தவை. ஆரினாக்கோ என்னும் ஆறு இந்நாட்டில் பாய்கிறது.

வெனிசூலா


இதன் கழிமுகப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. ஆற்றில் முதலைகள் அதிகம். காரோனி என்னும் ஆற்றில் உலகிலே மிக உயரமான ஏஞ்செல் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் உயரம் 970 மீட்டர்.

சமவெளிகளில் ஆடுமாடு வளர்க்கின்றனர். கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை முதலியன பயிராகின்றன. மலைச் சரிவுகளில் காப்பியும் கோக்கோவும் பெருமளவில் விளைகின்றன. காடுகளில் பனைவகைகள், ரப்பர் முதலிய மரங்கள் அதிகம்.

தென் அமெரிக்காவில் மக்களின் சராசரி வருமானம் இங்குதான் அதிகம். இதற்குக் காரணம் இங்குப் பெருமளவில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெயே யாகும். பெட்ரோலிய ஏற்றுமதியில் இந்நாடு சிறந்து விளங்குகிறது. இரும்பும் மிகுதியாக வெட்டி யெடுக்கப்படுகிறது. தங்கம், வைரம், செம்பு, கந்தகம் முதலிய கனிப்பொருள்களும் கிடைக்கின்றன. கடற்கரையோரமாக முத்துக் குளிக்கும் தொழில் நடைபெறுகிறது.

இந்நாட்டின் பழங்குடிகள் செவ்விந்தியர். குடியேறிய ஸ்பானியர்களும் இங்கு வாழ்கின்றனர். எனினும் இரு சாராரும் கலந்த கலப்பின மக்களே அதிகம். மக்க ளில் பெரும்பாலோர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். முக்கிய மொழி ஸ்பானிய மொழியாகும்.

கொலம்பஸ் 1498-ல் இந்நாட்டைக் கண்டுபிடித்தபின் ஸ்பானியர்கள் குடி