பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வேட்டையாடல்‌

விமானம்‌, கப்பல்‌ முதலியவற்றின்‌ வேகத்தை அறிய, அவற்றில்‌ வேறுவகைச்‌ சாதனங்கள்‌ உள்ளன. தில நர்டுகளில்‌ சைக்கிளில்‌ பொருத்திக்கொள்ளக்கூடிய வகையிலும்‌ வேகமானிகளைத்‌ தயாரிக்‌

இருர்கள்‌. ஊர்திக்கு இன்றி

வேகமானி ஓர்‌ யமையாததாகும்‌. முக்கிய நகரங்களில்‌

இல சாலைகளில்‌ வேக எல்லை குறிப்பிடப்‌ :

பட்டிருக்கும்‌. அதற்கு மீறி அதிக வேகத்‌ இல்‌ செல்வது குற்றமாகும்‌. ஆபத்தான துங்கூட. வேக எல்லைக்குள்‌ சென்று கொண்டிருக்கிறோமா என்பதைத்‌ தெரிந்து கொள்ள வேகமானி உதவுகிறது. குறித்த ஒரு நேரத்தில்‌, குறிப்பிட்ட தொலைவு செல்லவேண்டுமானால்‌, என்ன வேகத்தில்‌ செல்ல வேண்டுமென்பதைக்‌ கணக்கிட்டு, அந்த வேகத்தில்‌ செல்ல வேகமானி உதவு கிறது.

வேட்டையாடல்‌: உழுது பயிரிட்டு நாம்‌ நம்‌ உணவைப்‌ பெறுகிறோம்‌. துணி நெய்து ஆடை. தைத்துக்கொள் இரோம்‌. ஆனால்‌ ஆதி மனிதனுக்கு இவை இரண்டுமே தெரியாது. உணவுக்காக - அவன்‌ விலங்குகளையும்‌ பறவைகளையும்‌ வேட்டையாடிக்‌ கொன்று, அவற்றின்‌ இறைச்சியை உண்டான்‌... விலங்குகளின்‌ தோலினால்‌ உடலை மறைத்துக்கொண்‌ டான்‌. ஆதி மனிதன்‌ ஈட்டி, கோடரி போன்ற ஆயுதங்களை வேட்டையாடு வதற்கென்றே செய்துகொண்டான்‌. உண வுக்காகவும்‌, உடைக்காகவும்‌ ஆதிமனிதன்‌ கையாண்ட வேட்டையாடல்தான்‌ இன்று பொழுதுபோக்காகவும்‌, விளையாட்டாக வும்‌ கருதப்படுகிறது. இயற்கையுடன்‌ உறவாடி மகிழவும்‌, வனவிலங்குகளின்‌ நடைமுறைக்‌ ளை அறிந்துகொள்ளவும்‌ எழுகின்ற ஆர்வத்‌ தால்‌ இன்று பலர்‌ வேட்டையாடச்‌ செல்கிறார்கள்‌. இன்னும்‌ சிலர்‌ குறி பார்த்துச்‌ சுடுவதற்குப்‌ பழகும்‌ நோக்கத்‌ துடன்‌ வேட்டையாடச்‌ செல்கிறார்கள்‌. விளையாட்டுகளைப்‌ போலவே, வேட்டை யாடுவதிலும்‌ பலவகை உண்டு. அவற்றுள்‌ பறவை வேட்டையும்‌, விலங்கு வேட்டை

யும்‌ முக்கியமானவை. வேட்டையாடச்‌ செல்வோர்‌ பெரும்பாலும்‌ விரும்புவது விலங்கு வேட்டையே.

தொடக்கத்தில்‌ ஈட்டி, கோடரி, வில்‌, அம்பு போன்ற ஆயுகங்களை வேட்டைக்‌ குப்‌ பயன்படுத்தினார்கள்‌. இன்று துப்‌ பாக்கி பயன்படுகிறது. யானை மீதேறிச்‌ சென்று புலிவேட்டையாடுவதுண்டு. இரை விலங்கு ஒன்றை உயிருடனோ அல்லது கொன்றோ ஒரிடத்தில்‌ வைத்துவிட்டு,

மரங்களில்‌ பரண்‌ அமைத்து மறைந்‌ இருப்பர்கள்‌. இரை விலங்கை உண்ணப்‌ புலி வரும்போது, அதைச்‌ சுட்டு வேட்டை யாடுவார்கள்‌..

விலங்கு வேட்டையாடலுக்கு எல்லா நாடுகளிலும்‌ பல சட்ட இட்டங்களும்‌, விதிகளும்‌ உண்டு. இந்தியாவில்‌ ஓவ்‌ வொரு மாநிலத்திலும்‌ வேட்டையாட லுக்குத்‌ தனித்தனி விதிகள்‌ உள்ளன. இந்த விதிகளின்படி, வேட்டையாடு வதற்கு அந்தந்த மாநில வனத்துறை யினரிடம்‌ உரிமம்‌ (1400௦6) பெறவேண்டும்‌.

வேட்டையாடுவதால்‌ சில விலங்‌ சனங்கள்‌ அறவே அற்றுப்போய்விடக்‌ கூடிய நிலையில்‌ உள்ளன. அதனுல்‌, அவற்றை வேட்டையாடக்கூடாதெனப்‌ பல நாடுகள்‌ தடை விதித்துள்ளன. இந்தியாவில்‌ ஆசியச்‌ சிங்கம்‌, காச்மீரக்‌ கலைமான்‌, இந்தியக்‌ காண்டாமிருகம்‌, வெண்புலி, புள்ளிச்‌ சிறுத்தை, நான்கு கொம்பு இரலை, இந்திய நவ்விமான்‌ ஆகியவற்றை வேட்டையாடக்‌ கூடா தெனத்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளை வேட்டையாடி மகிழ்வது ஒரு பொழுதுபோக்காக இருந்தாலும்‌, இக்காலத்தில்‌ வன விலங்குகளைப்‌ பாது காப்பதில்‌ புதிய அக்கறை தோன்றி யுள்ளது. காட்டு விலங்குகளைப்‌ பாது காப்பதற்கென அரசினர்‌ வனவிலங்குப்‌ புகலிடங்களை (14114 11% $கற௦ரமகார8) அமைத்துள்ளனர்‌. இந்தியாவில்‌, தமிழ்‌ நாட்டிலுள்ள முதுமலை வனவிலங்குப்‌ புகலிடம்‌, வேடந்தாங்கல்‌ பறவைகள்‌ புகலிடம்‌, கேரளத்திலுள்ள பெரியாற்று விலங்குப்‌ புகலிடம்‌, மைசூர்‌ மாநிலத்தி

லுள்ள பண்டிப்பூர்‌ புகலிடம்‌, குஜ ராத்தில்‌ இர்‌ காடுகளிலுள்ள சிங்கப்‌ புகலிடம்‌, ஆசாமிலுள்ள கூரங்கா

காண்டாமிருகப்‌ புகலிடம்‌ முதலியவை முக்கியமானவை. சில புகலிடங்களில்‌:

இந்திய நவ்விமான்‌