பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கேள்வியும்

தம்பி! மனிதனோ, மிருகமோ, பட்சியோ, சப்தம் போடுவதுபோலக் காற்று சப்தம் போடுவதில்லை. காற்றுக்கு உயிருமில்லை,உடலுமில்லை வெட்ட வெளியில் போய்ப்பார். அங்கே காற்று சப்தம் போடுவதே இல்லை. அங்கே அதைத் தடுப்பார் யாருமில்லை. அதனால்தான். ஆனல் அதற்குத தடை ஏதேனும் உண்டானால் அப்போதுதான் அது சப்தம் போடும். ஏதேனும் ஒரு சிறு துவாரத்தின் வழி விரைந்து செல்லுமானல் அப்பொழுது சப்தம் கேட்கும். புல்லாங்குழல், நாதஸ்வரம் வாசிக்கும்பொழுது காற்றை சிறு துவாரங்களின் வழியாகப் போகச் செய்கிறார்கள். அதனால் தான் சப்தம் உண்டாகிறது.

123 அப்பா உள்ளங்கைகளைக் காதின்மீது வைத்துக் கொண்டு கேட்டால் அதிகத் தெளிவாகக் கேட்கிறதே. அதற்குக் காரணம் என்ன? தம்பி சப்தமானது ஏதாவது ஒன்றன்மீது பட்டு எதிரொலித்தால், அப்பொழுது அந்த சப்தம் அதிக உரத்ததாகவும் தெளிவாகவும் கேட்கும். அது போலத்தான உன்னுடைய உள்ளங்கையில் பட்டு எதிரொலி உண்டாகிறது. அதனால் தான் சப்தம் தெளிவாகக் கேட்கிறது. அப்படிக் கேட்பது பிறர் பேசும் சப்தமாகவும் இருக்கலாம, நீயே பேகம் சப்தமாகவும் இருக்கலாம். அந்தக் காரணத்தினால் சில பிச்சைக்காரர் பாடும்பொழுது காதுகளில் கைகளை வைத்துக்கொள்கிருர்கள். ரயிலில் போகும் பொழுது பார்த்திருப்பாய் அல்லவா?

124 அப்பா! தண்ணீர் உள்ள குடத்தைத் தட்டினால் கேட்பதைவிட தண்ணீர் இல்லாத குடத்தைத் தட்டினால் அதிக சப்தம் கேட்கிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் பேசினல் காற்றில் அலைகள் உண்டாகி நம்முடைய காதுக்கு வந்து சேர்ந்து சப்தம் கேட்கச் செய்கின்றன என்பதை அறிவாய். அதேபோல் ஜலமுள்ள