பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

83

குடத்தைத் தட்டினால் அதிலுண்டாகும் அதிர்ச்சி குடத்துக்கு வெளியேயுள்ள காற்று மூலம் காதுக்கு வந்து சேர்ந்து சப்தம் தருகிறது. ஆனல் ஜலமில்லாத குடத்தைத் தட்டினால் அதிலுண்டாகும் அதிர்ச்சி வெளியேயுள்ள காற்று மூலமாகவும் உள்ளேயுள்ள காற்று மூலமாகவும் நம்முடைய காதுக்கு வந்து சேர்கிறது. அதோடு உள்ளேயுள்ள காற்றில் உண்டாகும் அதிர்ச்சி குடத்தின் உட்புறம் பலவிடங்களிலும் பட்டுத் திரும்புகின்றன. ஆகவே இப்படிப் பலவழிகளாலும் அதிகமான அலைகள் வந்து சேர்வதால்தான் அதிகமான சப்தம் கேட்கிறது.

இந்தக் காரணத்தினுல்தான் வீணை, பிடில் முதலிய வாத்தியங்களில் உள்ளே காலியாகவுள்ள பெட்டிமாதிரி செய்யப்பட்டிருக்கிறது. உள்ளேயுள்ள காற்று மூலம் அலைகள் வர வழியிருப்பதற்காகவே அந்தப் பெட்டிகளில் துவாரங்கள் அமைத்திருக்கிருர்கள். குடம் காலியாக இருந்தாலும் அதை முடிவிட்டுத் தட்டினுல் ஜலமுள்ள குடம் போலவே தான் அதில் சப்தம் தராமல் இருக்கும்.

தம்பி! திருவனந்தபுரம் போகும்பொழுதும் பம்பாய் போகும்பொழுதும் மலையைக் குடைந்து ரயில் போட்டிருக்கிறார்களே, அதில் ரயில் வண்டி போகும்பொழுது அதிக சப்தம் கேட்கிறதே. ஞாபகமிருக்கிறதா? அதற்கும் இதுவேதான் காரணம்.

125 அப்பா! தந்தித் தூண்களில் காது வைத்துக் கேட்டால் இரைவது போல் கேட்கிறதே, அதுதான் தந்தி பேசுவதோ?

தம்பி! தந்தி, கம்பியில் பேசுவதில்லை. அதில் மின்சார சக்திதான் அனுப்புவார்கள். அதன் மூலம் விஷயம் அனுப்புவது எப்படி எனபதை இன்னொரு சமயம் கூறுகிறேன். ஆனல் தந்தித்தூண் இரைவதன் காரணத்தைக்