பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கேள்வியும்

கூறுகிறேன்,கேள். எந்த வஸ்துவையும் விரைப்பாக நீட்டிவைத்திருந்தால், அதன்மீது காற்றுப்படும்பொழுது, அது துடிப்பதுபோல் அசையும். அதனால் சப்தம் உண்டாகும். அது கேட்கக்கூடிய அளவு உரத்ததாய் இருந்தால் அந்தச் சப்தம் நம்முடைய காதில் கேட்கும். அதனால் தான் தந்திக் கம்பியில் காற்றுப்பட்டுத் துடிக்கிறது. அதோடு சேர்ந்து துாணும் துடிக்கிறது. அது காரணமாகத்தான் தூணில் காது வைத்தால் இரைச்சல் கேட்கிறது.

126 அப்பா! இரவு யாராவது வந்தால் நமக்குக் கேட்கவில்லை. நாய்க்குக் கேட்டுவிடுகிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாயின் காதுமடலில் மூன்று சிறு தசைசள் உள. அவற்றைக்கொண்டு நாய் தன் காதுகளை எந்தப் பக்கமும் தன் இஷ்டம்போல் திருப்பிக்கொள்ள முடியும். அந்தப்படி திருப்பிக் கொடுத்து சிறிதான சப்த அலைகளையும் சேகரித்துக் காதுக்குள் அனுப்பி வைக்கிறது. அதனால் சிறு சப்தமும் அதற்குக் கேட்டுவிடுகிறது. இது போன்ற சக்தி எல்லா மிருகங்களிடமும் காணப்படுகிறது.

மனிதனுடைய காதிலும் அதேமாதிரியான தசைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளைக் கொண்டு நாமும் நம்முடைய காது மடலை நம் இஷ்டம்போல் திருப்பிக்கொள்ளலாம். சிலர் அவ்விதம் தங்கள் காது மடல்களை ஆட்டுவதையும் பார்த்திருப்பாய். ஆனால் பொதுவாக மனிதன் அந்த சக்தியை இழந்துவிட்டான். இப்பொழுது காதுகளை நம்மிஷ்டம்போல் திருப்ப முடிவதில்லை. அதனால் சிறு சப்த அலைகளைச் சேகரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் ஆய்விட்டோம். அதனுல்தான் நாய்க்குக் கேட்பது நமக்குக் கேட்பதில்லை.

127 அப்பா! வெயில் அடிக்கிறது. உஷ்ணமாயிருக்கிறது. விளக்கு எரிகிறது; உஷ்ணமாயிருக்கிறது; உஷ்ணம் என்ருல் என்ன?