பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

85

தம்பி! ஒரு பாத்திரத்தில் ஜலம் விட்டு தீயில் வைத்து எடுத்தால் அது சுடுகிறது. அதனால் இப்பொழுது ஜலத்தோடு உஷ்ணம் சேர்ந்திருக்கிறது என்று அறிகிறோம். அப்படியானால் உஷ்ணம் என்பது என்ன?

வஸ்து என்றால் அதைப் பூமியானது தன்னிடத்தில் இழுக்கும். அதனால் நிறை உடையதாயிருக்கும். காற்று கண்ணுக்குத் தெரியவில்லைதான்; அவ்வளவு மெல்லியதாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கும் நிறையுண்டு. அப்படியானால் உஷ்ணமும் காற்றுப்போல் மெல்லியதோர் வஸ்துவா? அன்று, எந்த வஸ்துவும் சூடானபின் நிறையில் கூடியிருப்பதில்லை. அதனால் உஷ்ணம் என்பது வஸ்துவன்று.

அப்படியானால் அது என்ன? அணுக்கள் அப்படியும் இப்படியுமாக அசைவதைத்தான் அறிஞர்கள் உஷ்ணம் என்று கூறுகிறார்கள். ஜலத்திலுள்ள அணுக்கள் எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கும். அதைத் தீயில் வைத்ததும் அந்த அசைவுகள் அதிக வேகமாகவும் அதிக தூரமாகவும் நிகழ்கின்றன.ஆகவே அதிக வேகமான அசைவை அதிக உஷ்ணம் என்றும், வேகம் குறைந்த அசைவைக் குறைவான உஷ்ணம் என்றும் கூறுகிறோம்.

ஒருவனிடம் பணம் இருந்தால் அதோடு பணம் சேர்த்துக்கொண்டே போகலாம். அதற்கு முடிவே கிடையாது. ஆனால் அவனிடமுள்ள பணத்தை எடுத்துக்கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவு உண்டு. அவனிடம் யாதொரு பணமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு விடலாம். அப்பொழுது அவனிடம் இருப்பது பூஜ்யம் பணம்.

அதேபோல் ஜலத்தோடு உஷ்ணம் சேர்த்துக் கொண்டே போகலாம், அதற்கு முடிவு கிடையாது. ஆனால் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொண்டே போனால் ஒரு எல்லை