பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கேள்வியும்


132 அப்பா! ரயில்வேத் தண்டவாளங்களுக்கு இடையில் இடம் விட்டிருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! உலகில் காணப்படும் வஸ்துக்களில் அநேகம் உஷ்ணத்தால் விரிவடையும். அத்தகைய வஸ்துக்களில்

இரும்பும் ஒன்று, அதனால் இரும்புத் தண்டவாளங்கள் வேனிற் காலத்தில் நீண்டுவிடும்; அதற்காகத்தான் இடையில் இடம் விட்டு வைக்கிறார்கள். அப்படி இடம் விட்டு வைக்காவிடில் தண்டவாளங்கள் நீளும் பொழுது ஒன்றோடொன்று மோதி வளைந்துவிடும்; ரயில் வண்டி போகமுடியாது. அவ்விடம் இடம் விட்டு வைத்திருப்பதால்தான் வண்டி போகும்பொழுது கடகடவென்று சப்தம் கேட்கிறது. குளிர் காலத்தில் தண்டவாளங்கள் சுருங்கிவிடும். அதனால் இடை அதிகமாய்விடும். கடகட சப்தம் அதிகமாகக் கேட்கும்.

தம்பி! ட்ராம்வே தண்டவாளங்களைப் பார்த்திருக்கிறாயா? அவைகளுக்கு இடையில் இடம்விட்டு வைப்பதில்லை. அதற்குக் காரணம் என்ன? ட்ராம்வேத் தண்டவாளங்களை நடுரோட்டில் புதைத்து வைக்கிறார்கள். அதோடு அவைகளுக்கு இரண்டு ஓரங்களிலும் கற்கள் வைத்து இறுக்கியும் விடுகிறார்கள். அதனால் அந்தத் தண்டவாளங்களைச் சூரிய உஷ்ணம் அதிகமாகப் பாதிப்பதில்லை. அவை நீளவும சுருங்கவும் செய்வதில்லை. அதுதான் இடையில் இடம்விட்டு வைக்காததற்குக் காரணம்.