பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கேள்வியும்

ஆதலால் அந்தக் காலத்தில் ஈர வஸ்திரங்கள் சீக்கிரமாக உலர்ந்து விடுகின்றன.

ஆனால் குளிர் காலத்தில் காற்று குளிர்ந்திருப்பதால் அதில் அதிகமான நீராவி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சிய நீராவி இருந்தால் அது மறுபடியும் நீராவியை ஏற்றுக் கொள்ளாது. அதற்குப் பதிலாக அளவுக்கு அதிகமாயுள்ள நீராவி ஜலமாக மாறிவிடுகிறது. அவ்விதமாகக் காற்றிலுள்ள நீராவி உலர்ந்த வஸ்திரங்களின்மீது ஜலமாக மாறுவதால்தான் அவை ஈரமாகிவிடுகின்றன.

135 அப்பா! வஸ்திரங்கள் காற்று வீசினால்தான் அதிகச் சீக்கிரத்தில் உலர்கின்றன. அதற்குக் காரணம் எள்ன?

தம்பி துணிகளிலுள்ள ஜலம் முழுவதும் ஆவியாக மாறிப் போய்விடும்பொழுதுதான் அவை உலர்ந்து போகின்றன. அப்படி ஜலம் ஆவியாக மாறும்பொழுது காற்று வீசினால் அந்த ஆவி அந்த இடத்தைவிட்டு அகன்று போகிறது. அப்பொழுது மறுபடியும் கொஞ்சம் ஜலம் ஆவியாக மாறி அகன்று போகிறது. இப்படியே ஜலம் முழுவதும் ஆவியாக மாறிப்போய் உலர்ந்துவிடுகின்றது. ஆனால் காற்று வீசாமல் இருந்தால் துணிகளிலுள்ள ஜலம் ஆவியாக மாற முடியாமல் போகிறது. முதலில் உண்டான ஆவி அந்தத் துணிகளின் அருகிலேயே நின்று கொண்டிருந்தால் மறுபடியும் ஆவி உண்டாவது எப்படி? அதனால்தான் காற்று வீசாத பொழுது துணிகள் சீக்கிரமாக உலர்வதில்லை.

136 அப்பா! மழை காலத்தில் நாம் விடும் மூச்சு நம்முடைய கண்ணுக்குத் தெரிகிறதே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் வெளியே சுவாசிக்கும் காற்றில் கரியமில வாயுவோடு நீராவியும் கலந்திருக்கிறது. ஆனால் சாதாரண