பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கேள்வியும்

இரண்டாவது வஸ்துவின் மீது இன்னொரு வஸ்துவை வைத்தால், இரண்டாவது வஸ்து தன்னுடைய உஷ்ணத்தில் ஒரு பாகத்தை மூன்றாவது வஸ்துவுக்குக் கொடுக்கிறது. இந்த விதமாகச் சில வஸ்துக்கள் பிற வஸ்துக்களின் உஷ்ணத்தை கிரகித்து வேறு இடத்துக்குக் கொண்டு போகும் தன்மை உடையவனாக இருக்கின்றன. ஆனால் வேறு சிலவஸ்துக்கள் உள. அவைகளுக்கு அந்தத் தன்மை இல்லை. மரத்தூள் அந்த இனத்தைச் சேர்ந்ததாகும். அது காற்றிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்து ஐஸுக்குக் கொடுக்காது. அதனால் தான் ஐஸை மரத்தூளில் பொதிந்து வைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் ஐஸானது சீக்கிரத்தில் உருகிப் போகாமல் வெகு நேரம் வரை கட்டியாகவே இருந்து வருகிறது.

139 அப்பா! ஐஸ்க்ரீம் செய்யும்போது, ஐஸுடன் உப்பும் போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஐஸ் க்ரீம் செய்யும் மிஷினில் ஒரு தொட்டியிருக்கிறது. அதனுள் ஒரு பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் பாலும் சர்க்கரையும் பழச்சாறும் கலந்து வைப்பார்கள். அந்தப் பாத்திரத்தைச் சுற்றி தொட்டியில் ஐஸும் உப்பும் போடுவார்கள். அதன்பின் பால் பாத்திரத்தைச் சுற்றுவதற்குள்ள கைப்பிடியை பிடித்துச் சுற்றுவார்கள். பால் பாத்திரம் விரைவாக சுழலும், பால் இறுகி ஐஸ் க்ரீம் ஆகி விடும்.

அப்படி ஐஸ் க்ரீம் செய்யும்பொழுது, ஐஸ் போட்டால் போதாது என்று அதோடு உப்பும் போடுவதன் காரணம் என்ன? சாதாரணமாக ஐஸ் எப்பொழுதும் இளகக்கூடிய வஸ்து. அப்படி இளகுவதற்குவேண்டிய உஷ்ணம் அதற்கு எங்கிருந்து கிடைக்கிறது. அது பால் பாத்திரத்திலுள்ள உஷ்ணத்தைத்தான் கிரகித்துக்கொள்கிறது. அதிலுள்ள