பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

95

இருக்கிறது. அதனால் திரி சீக்கிரம் எரிந்து போவதில்லை. அடிக்கடி தூண்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எண்ணெய் எரிவதால் வெளிச்சம் பிரகாசமாய் இருக்கிறது.

142 அப்பா! விளக்கில் எண்ணெய் ஊற்றினால் எரிகிறது, ஜலம் ஊற்றினால் எரியவில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எரிவது என்றால் பிராணவாயுவோடு சேர்ந்து வேறோர் வஸ்துவாக மாறுதல் என்பதாகும். அதனால் எந்த வஸ்து அவ்விதம் பிராண வாயுவோடு சேருமோ அதுதான் எரியும். எந்த வஸ்து அவ்விதம் சேராதோ அல்லது அவ்விதம் சேர்ந்து முடிந்து விட்டதோ அது எரியாது.

ஹைட்ரோஜன் என்று ஒரு வாயு இருக்கிறது.அது பிராண வாயுவோடு சேரக் கூடியது. அதனால் அது எரியும். அது எரிந்து தீர்ந்துவிட்டால் அதன்பின் அதில் எரியக்கூடியது ஒன்றுமில்லை. அப்படி அது பிராண வாயுவோடு சேர்ந்து எரியும்பொழுதுதான் அந்த இரண்டு வாயுக்களும் ஜலமாக ஆகின்றன. அதனால் ஜலத்தில் எரியக்கூடிய ஹைட்ரோஜன் இல்லை. அதிலுள்ள ஹைட்ரோஜன் எரிந்து தீர்ந்துவிட்டது.

ஆனால் எண்ணெயில் ஹைட்ரோஜனும் கரியும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவை இரண்டும் எரியக் கூடிய தன்மை உடையவை. அநேக எண்ணெய்களில் பிராணவாயுவும் காணப்படுவதுண்டு. ஆனால் அது எண்ணெயிலுள்ள ஹைட்ரோஜனும் கரியும் எரிவதற்குப் போதுமான அளவில் இல்லை. அதனால்தான் விளக்கில் எண்ணெய் ஊற்றினால் எரிகிறது. ஜலம் ஊற்றினால் எரிவதில்லை.