பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கேள்வியும்

மாதிரி இராது. அவற்றில் எல்லாம் ஒரே வெள்ளை ஜோதி யாயிருக்கும். எண்ணெய் வார்த்து எரியும் திரி விளக்குகளில்தான் நீ கூறுகிற மாதிரி தெரியும்.

அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்யைத் திரி உறிஞ்சுகிறது. எண்ணெய் திரியின் நுனியில் வந்து நிற்கிறது. நாம் விளக்கேற்றியதும் அந்த உஷ்ணத்தால் மேல் நுனியிலுள்ள எண்ணெய் ஆவியாக மாறுகிறது. அந்த ஆவிதான் சுடர் விட்டு எரிகிறது. அப்படியே ஆவி உண்டாய்க் கொண்டும் எரிந்துகொண்டும் இருக்கிறது.

எண்ணெயில் கரி இருக்கிறது. அந்தக் கரிதான் காற்றிலுள்ள பிராணவாயுவோடு சேர்ந்து எரிகிறது. அது பிராணவாயு இல்லாவிட்டால் எரியாது. விளக்கில் காணப்படும் சுடரின் வெளிப்பாகம் காற்றுக்குச் சமீபமாக இருக்கிறது. அதனால் அங்குள்ள ஆவிக்குப் போதுமான பிராணவாயு கிடைத்து விடுகிறது. அதனால்தான் அந்த ஆவி முழுவதும் எரிந்து விடுகிறது. அதனால்தான் வெளிப்பாகத்தில் சுடர் மஞ்சள் நிறமாகத் தோன்றுகிறது.

ஆனால் சுடரின் உட்பாகத்திற்குப் போதுமான பிராண வாயு போய்ச் சேர்வதில்லை. அங்கே ஆவியானது அநேகமாக எரியாமலே இருந்து விடுகிறது. அதனால்தான் உட்புறம் கறுப்பாகத் தெரிகிறது.

147 அப்பா! அடுப்பில் ஜலம் ஊற்றினால் அணைந்து விடுகிறதே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஜலம் நெருப்பைக் குளிரும்படி செய்து விடுகிறது. அதனால்தான் அணைந்து போகிறது என்று எண்ணுகிறாயோ? அப்படியில்லை, தம்பி! குளிர்ந்த ஜலம் ஊற்றாமல் கொதிக்கும் ஜலத்தை ஊற்றினாலும் நெருப்பு அணைந்து தான் போகும். அதனால் நெருப்பு அணைவதற்கு அது காரணம் ஆகாது.