பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

101


தான் விறகு கொழுந்துவிட்டு எரிகிறது. ஆனால், கரி எரியும் பொழுது வாயு ஒன்றும் உண்டாவதில்லை கரிதான் அப்படியே பிராண வாயுவோடு சேர்ந்து எரிகிறது. அதனால் தான் கரி கொழுந்து விடாமல் கங்காகவே எரிகிறது.

152 அப்பா! விறகு எரிகிறது. இரும்பு எரியவில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எரிவது என்றால் பிராண வாயுவோடு சேர்ந்து வேறு வஸ்துவாக மாறுதல் என்பதுதான் பொருள். அப்படிச் சேரும்படி செய்வதற்கு உஷ்ணம் தேவை. அதற்காகத்தான் அடுப்பில் தீப்பற்ற வைக்கிறோம். அப்பொழுது விறகு பிராண வாயுவோடு சேர்ந்து எரிய ஆரம்பித்து விடுகிறது.

அதுபோல் இரும்பும் பிராண வாயுவோடு சேரக்கூடியது தான். ஆனால் இரும்பைப் பிராணவாயுவோடு சேரும்படி செய்வதற்குச் சாதாரண உஷ்ணம் போதாது; அபாரமான உஷ்ணம் தேவை. அதனால் விறகை எரியச் செய்த மாதிரி இரும்பை எரியச் செய்யமுடியாது.


ஆயினும் நாம் இரும்பைக் காய்ச்சினால், அப்பொழுது அது பிராணவாயுவோடு சேரவில்லை என்று எண்ண வேண்டாம். அது சேரவே செய்கிறது. அதனால் அதன் அளவில் சிறிது குறைந்து போகவே செய்கிறது. ஆனால் அப்படிச் சேர்வதும் குறைவதும் நிரம்ப மெதுவாகவும் வெகு சிறிதாகவும் இருப்பதால் நம்முடைய கண்ணுக்குத் தெரியவில்லை.

அப்படி இரும்பு பிராண வாயுவோடு சேர்வது உஷ்ணம் உண்டானால்தான் என்று எண்ணாதே. உஷ்ணம் உண்டாக்க வேண்டாம், சாதாரணமாகக் காற்றிலுள்ள உஷ்ணம் போதும். ஆனால் இரும்பு ஈரமாயிருக்க வேண்டும். அப்படியிருந்தால் அது பிராண வாயுவோடு சேர்ந்து