பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கேள்வியும்

கொள்ளும். அப்பொழுது நெருப்பு உண்டாகாது. ஆயினும் பிராணவாயுவோடு சேர்ந்து வேறு வஸ்துவாக மாறும். இரும்பு துருப்பிடிக்கிறது. சிவப்புத் தூளாக உதிர்கிறது பார்த்திருப்பாய். அதற்கு இரும்பு பிராண வாயுவோடு சேர்வதுதான் காரணம்.

153 அப்பா! அடுப்பு எரியும்பொழுது சில சமயம் புகை உண்டாகிறது, சில சமயம் புகை உண்டாகவில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எந்த வஸ்துவும் எரியவேண்டுமானால் அதற்குக் காற்று அவசியம். போதுமான காற்று இருந்தால் நன்றாக எரியும். போதுமான காற்று இல்லாவிட்டால் நன்றாக எரியாது. புகைந்துகொண்டே எரியும். அதாவது எரியும்பொழுது அரைகுறையாக எரிந்து சிறு பொடிகள் அகன்று வெளியேறும். அதைத்தான் புகை என்று கூறுகிறோம். ஆகவே சில சமயம் அடுப்பில் விறகு எரிவதற்குப் போதுமான காற்று உள்ளே செல்லாமல் இருக்கும். அப்பொழுது அடுப்பில் புகை உண்டாகும். அம்மா குழல் கொண்டு ஊதுவாள். அதன்பின் புகையாமல் எரியும் பார்த்திருப்பாய் அல்லவா?

154 அப்பா! அடுக்களையில் புகை உண்டாகிறதே, அந்தப் புகை எங்கே போகிறது?

தம்பி! அடுப்பில் விறகு எரியும்பொழுது, போதுமான காற்று இல்லாவிட்டால் அரைகுறையாக எரிந்த தூள்கள் புகையாகக் கிளம்புகின்றன. அது உஷ்ணமாய் இருப்பதால் காற்றைவிட லேசாக இருக்கிறது. அதனால் மேலே எழுந்து செல்லுகிறது. அதிலுள்ள வாயுக்கள் காற்றோடு கலந்துபோகும்; அதிலுள்ள தூள்கள் அருகிலுள்ள வஸ்துக்களின்மீது படிந்துவிடும். புகை போக்கி கறுப்பாய் இருப்பதற்கும், ரயில்வே எஞ்சின் நிற்குமிடத்தில்