பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கேள்வியும்


வைக்கும் உணவுப் பாத்திரம் நன்றாய் கொதித்ததும் அதை எடுத்து ஒரு மரப்பெட்டிக்குள் வைத்து, அதைச் சுற்றியுள்ள காலியிடம் முழுவதிலும் ஆஸ்பெஸ்டாஸ்

என்னும் வஸ்துவைத் திணித்து வைத்து விட்டால் போதும். உணவு நன்றாக வெந்து போகும். உலகில் எல்லா வஸ்துக்களிலும் சூடேறும். ஆனால் ஆஸ்பெஸ்டாஸில் மட்டும் கொஞ்சங் கூட சூடேறாது. ஆதலால் பாத்திரத்திலுள்ள உஷணம் வெளியே போகாமல் அதிலேயே தங்கி உணவை நன்றாக வேக வைத்துவிடுகிறது. இந்த ஆஸ்பெஸ்டாஸ் எல்லோர்க்கும் கிடைக்காது. அதற்குப் பதிலாக வைக்கோலையும் கடுதாசித் துண்டுகளையும் திணித்து வைக்கலாம். அவைகளும் பாத்திரத்திலுள்ள உஷ்ணத்தை வெளியே போகாமல் தடுத்துவிடும். அவைகளுக்கும் உஷ்ணத்தை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்துக்குக் கொண்டு போகும் குணம் கிடையாது. இந்த விதமாக வேகவைப்பதைத்தான் நெருப்பில்லாமல் சமையல் செய்வது என்று கூறுகிறார்கள்.

157 அப்பா! ஜலம் கொதிக்கும் பொழுது குமிழிகள் கிளம்புகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஜலத்தில் எப்பொழுதும் காற்று கரைந்திருக்கிறது. அதனால் ஜலம் கொதிக்கும்பொழுது, அதில் கரைந்துள்ள காற்று உஷ்ணமடைகிறது. அதனால் விரிந்து மேலே கிளம்புகிறது. உஷ்ணமானது பாத்திரத்தின்