பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

105

அடியிலேயே முதலில் தங்குவதால், அங்குள்ள காறறுத் தான் முதலில் விரிவடைகின்றது. ஆதலால் குமிழிகள் அங்கிருந்துதான் கிளம்ப ஆரம்பிக்கின்றன. ஆயினும் எல்லாப் பாத்திரங்களிலும் குமிழிகள் எளிதில் உண்டாய் விடுவதில்லை. குமிழிகள் உண்டாவதற்கு பாத்திரத்தினுள்ளே அடிப்பாகம் சொர சொரப்பாய் இருக்க வேண்டும். கண்ணாடிப் பாத்திரங்களில் அதிகமாகக் குமிழிகள் உண்டாவதில்லை.

158 அப்பா! ஏதேனும் கொதித்தால் அது கொதிக்க ஆரம்பித்துவிட்டது என்று தூரத்திலிருந்து அறிவது எப்படி?

தம்பி! எதையும் அடுப்பின் மீது வைத்ததும் யாதொரு சப்தமும் கேளாமல் இருக்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும், சலசல என்று சிறு சப்தமாக கேட்கும். அந்தச் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும் ஆனால் திடீரென்று சப்தம் அடங்கி விடும். அப்படிச் சப்தம் அடங்கினால் அப்பொழுதுதான் கொதிக்க ஆரம்பித்துவிட்டது என்று அறிந்து கொள்ளவேண்டும். அதோடு ஏதேனும் காய்கறியாகவோ அல்லது வாசனை யுள்ளதாகவோ இருந்தால், அதிலிருந்து வாசனை வரும் பொழுது கொதிக்க ஆரம்பித்துவிட்டதாக எண்ணி விடலாம் கொதிக்க ஆரம்பித்தால்தான் வாசனை கிளம்பும்.

159 அப்பா! சிலர் வெந்நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் சில கோலிக் காய்களைப் போட்டு வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் கொதிக்க வைக்கும் ஜலம் எவ்வளவு சுத்தமாயிருந்தாலும். அதில் பலவிதமான உப்புக்கள் கலந்தே இருக்கும். அந்த உப்புக்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பாத்திரத்தில் தங்கி உறைந்து விடும். அதனால்தான் அடிப்பாகம் கொஞ்ச நாளில் வெள்ளையாகத் தோன்றுகிறது. அதைச் சுரண்டித்தான்