பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கேள்வியும்

சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பாத்திரத்தில் இரண்டொரு கோலிக்காய்களைப் போட்டு வைத்தால்,

அந்த உப்புககள் பாத்திரத்தில் தங்காமல் கோலிக்காய்களில் போய்த் தங்கி விடுகின்றன.பாத்திரம் சுத்தமாய் இருக்கிறது.

160 அப்பா! எண்ணெய் கொதிப்பதைவிட ஜலம்கொதிக்க அதிக நேரம் ஆகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஆமாம், எண்ணெய் மட்டுமா, எல்லா வஸ்துக்களுமே ஜலத்தைவிடச் சீக்கிரத்தில் கொதித்துவிடும். அதற்குக் காரணம் என்ன? எந்த வஸ்துவையும் பிரித்துக் கொண்டே போனால் இறுதியில் பிரிக்க முடியாதபடி அவ்வளவு சிறியதாய் நிற்பதை "அணு" என்று கூறுவார்கள். ஆயினும் சில வஸ்துக்களில் பெரிய கனத்த அணுக்களும் சில வஸ்துக்களில் சிறிய கனம் குறைந்த அணுக்களுமாகக் காணப்படும். எண்ணெயின் அணுக்கள் பெரியவை. ஜலத்தின் அணுக்கள் சிறியலை. அதனால் ஒரு லிட்டர் எண்ணெயில் உள்ளதைவிட ஒரு லிட்டர் ஜலத்தில் அதிகமான அணுக்கள் இருக்கின்றன. ஆதலால் குறைந்த அணுக்கள் உள்ள எண்ணெய் கொதிக்கச் கொஞ்சம் உஷ்ணம் தேவை. அதனால்தான் எண்ணெய் கொதிப்பதைவிட ஜலம் கொதிக்க அதிக நேரம் ஆகிறது. அதே காரணத்தினால்தான் எண்ணெய் சூடு ஆறுவதைவிட ஜலம் சூடு ஆற அதிக நேரமாகும்.