பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

109

தம்பி! உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்ளும் சக்தி இரும்புக்கு அதிகம். அதைத் தொட்டால் அது நம்முடைய கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்கிறது. அதனால் கை குளிர்ந்து விடுகிறது. ஆனால் நாமே இரும்பு குளிர்ந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறோம். மரக்கட்டை இரும்பைப்போல் உஷ்ணத்தைக் கிரகிப்பதில்லை. அதனால் அதைத் தொட்டால் நம்முடைய கை குளிர்ச்சி அடைவதில்லை. கையிலுள்ள உஷ்ணம் கையிலேயே தங்கி இருக்கிறது. அதனால்தான் மரக்கட்டை இரும்பைப் போல் குளிர்ந்து தோன்றுவதில்லை.

166 அப்பா! தெர்மாஸ் ப்ளாஸ்கில் காப்பி ஆறாமல் இருப்பது போல ஐஸும் உருகாமல் இருக்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒரு பாத்திரத்தில் சூடான காப்பி ஊற்றி வைத்தால் அதிலுள்ள உஷ்ணம் வெளியே காற்றுக்குப் போய் விடுகிறது. அப்படிப் போகாமல் இருந்தால் காப்பி ஆறிப்போகாமல் இருக்கும். அதுபோல் உஷ்ணம் வெளியே போகாதபடி தெர்மாஸ் ப்ளாஸ்கில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் ஒரு கண்ணாடி போத்தல் இருக்கிறது. அதைச் சுற்றி இன்னொரு போத்தல் இருக்கிறது. இரண்டுக்கும் இடையே காற்றில்லாமல் செய்திருக்கிறார்கள். அதனால் உஷ்ணமானது வெளியே போகாமல் இருந்து விடுகிறது. அதுபோலவே வெளியே காற்றிலுள்ள உஷ்ணமும் உள்ளே போகாமல்