பதிலும்
111
ஏராளமாக இருக்கின்றன. அதனால்தான் மண் பானையில் ஜலம் வைத்தால் வெளியே கசிந்து வருகிறது. அப்படி கசிந்து வரும் ஜலம் ஆவியாக மாறிக்கொண்டே இருக்கும். ஜலம் ஆவியாக மாறுவதற்கு உஷ்ணம் தேவை. அந்த உஷ்ணத்தைப் பானையிலுள்ள ஜலத்திலிருந்து கிரகித்துக் கொள்கிறது. அதனால் பானையிலுள்ள ஜலம் குளிர்ந்து விடுகிறது. ஆகவே இந்த மாதிரி பானையிலுள்ள ஜலம் குளிர வேண்டுமானால் பானையில் ஜலம் கசியக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி புதுப் பானையில்தான் கசியும், பழைய பானையிலும் கரிப்பானையிலும், வழவழப்பாக செய்த பானையிலும் கசியாது. அந்த பானைகளில் ஜலம் ஒருநாளும் குளிராது. அதேபோல் பித்தளை முதலிய உலோகப் பாத்திரங்களில் ஜலம் குளிர்வதில்லை. அவைகளில் புது மண் பானையில் போல் சிறு துவாரங்கள் கிடையா அல்லவா?
170 அப்பா! க்ளாஸில் சூடாய் எதையும் ஊற்றுமுன் கரண்டி ஒன்றைப் போட்டு வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
தம்பி! சூடான காப்பியோ ஜலமோ ஊற்றினால் சூட்டைத் தாங்க முடியாமல் க்ளாஸ் உடைந்துவிடும். சூடான காப்பியை ஊற்றும்பொழுது. அதன் உஷ்ணத்தை வேறு எதுவேனும் வாங்கிக்கொள்ளுமானால், அப்பொழுது உஷ்ணம் க்ளாஸைத் தாக்காது. க்ளாஸ் உடையாதிருக்கும். அப்படிக் காப்பியின் உஷ்ணத்தை வாங்கிக்கொள்வவதற்காகத்தான் களாஸுக்குள் கரண்டி ஒன்றைப்போட்டு வைக்கிறார்கள். கரண்டி உலோகத்தால் செய்யப்பட்டது, உலோகத்துக்கு உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்ளும் சக்தி அதிகம். அதுவும் வெள்ளிக் கரண்டியாய் இருந்தால் மிகவும் நல்லது. காப்பியை ஊற்றினவுடன் கரண்டி அதன் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்கிறது. அதனால் க்ளாஸ் உடையாமல் இருந்து விடுகிறது.