பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கேள்வியும்

171 அப்பா! சூடான ஜலம் ஊற்றினால், தடித்த க்ளாஸ் கீறி விடுகிறது. மெல்லிய க்ளாஸ் கீறாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சூடான ஜலத்தைத் தடித்த க்ளாஸில் ஊற்றினால், அதன் உஷ்ணத்தால் க்ளாஸின் உட்புறம் விரிவடைகிறது. ஆனால் க்ளாஸ் தடித்ததாய் இருப்பதால், உஷ்ணமானது க்ளாஸின் வெளிப்புறம் போய் எட்டுவதில்லை. அதனால் அந்தப்புறம் அப்படியே இருந்துவிடுகிறது. இவ்விதம் உட்புறம் விரிந்து வெளிப்புறம் விரியாமல் இருப்பதால்தான் க்ளாஸ் கீறி விடுகிறது. ஆனால் க்ளாஸ் மெல்லியதாக இருந்தால். உட்புறம் விரியும் பொழுது வெளிப்புறமும் விரிந்துவிடும். அதனால் மெல்லிய க்ளாஸ் கீறுவதில்லை.

172 அப்பா! ஜலத்தில் ஐஸ் போட்டால் குளிர்ந்திருக்கிறதே! அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அநேக வஸ்துக்கள் உஷ்ணம் சேர்ந்தால் உருகும் தன்மை உடையவை. ஐஸுக்கும் அந்தத் தன்மை உண்டு. சாதாரணமாக ஜலம் கைக்குச் சூடாக தெரியா விட்டாலும் அதில் உஷ்ணம் இருக்கவே செய்கிறது. உஷ்ணமானி வைத்தும் பார்த்தால் தெரியும். அதனால் ஐஸை ஜலத்துக்குள் போட்டால் அது ஜலத்திலுள்ள உஷ்ணத்தால் உருகுகிறது. அந்த விதமாக ஜலமானது தன்னுடைய உஷ்ணத்தை இழந்து விடுவதால் அதிகக் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. அதே காரணத்தினால் தான் நாம் ஐஸைக் கையில் எடுத்தால் கை குளிர்ந்து விடுகிறது.

173 அப்பா! கடுதாசியைத் தீயில் போட்டால் சுருண்டு சுருண்டு எரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒட்டுத்தாள்தான் ஜலத்தை உறிஞ்சும் என்று எண்ணாதே, சாதாரண தாளும் உறிஞ்சும். ஆனால் அதிகமாக