பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

113

உறிஞ்சாது. அவ்வளவுதான். அதனால் கடுதாசிகள் காற்றிலுள்ள ஜலத்தைக் கொஞ்சமாவது உறிஞ்சியே இருக்கும். ஆதலால் கடுதாசியைத் தீயில் போட்டால் அதிலுள்ள ஜலம் ஆவியாக வெளியே போகும். அதன் இடத்தில் காற்று வந்து நிறையும். அதனால் கடுதாசி சுருண்டு விடும்.

அப்படிச் சுருள்வதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. மற்ற வஸ்துக்களைப் போலவே கடுதாசியும் உஷ்ணம் உண்டானவுடன் விரியும். அப்படி விரியும் பொழுது, கடுதாசி முழுவதும் ஒரே அளவில் உஷ்ணம் ஏறினால், கடுதாசி விரியுமே தவிர உருவம் மாறாது, சுருளாது. ஆனால் உஷ்ணமானது கடுதாசியில் ஒரே அளவில் ஏறுவதில்லை. அதனால் ஒரு பாகம் அதிகமாக விரியும். ஒரு பாகம் குறைவாக விரியும். அதனால்தான் கடுதாசி சுருண்டு சுருண்டு எரிகிறது.

174 அப்பா? பால் கொதிக்கும்பொழுது ஆடை படிகிறது. ஜலம் கொதிக்கும்பொழுது ஆடை படியவில்லை. அதற்குக் காரணம் என்ன? தம்பி! ஜலத்தில் ஜலத்தைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் கிடையாது. பாலிலோ ஜலத்தோடு வேறு பல வஸ்துக்களும் உள. அவற்றுள் *பால் ஊன் சத்து" என்பது ஒன்று. அது உஷ்ணம் சேர்ந்ததும் உறையும் தன்மை உடையது. அந்தச்சத்துத்தான் பால் காய்ச்சும் பொழுது ஆடையாகப் படிகிறது.

அப்படி ஆடை படிய விடாமல் அநேகர் கிண்டிக் கொண்டிருப்பார்கள். அது தவறு. ஆடை படிந்தால் தான் பாலிலுள்ள ஜீவசத்துக்கள் வெளியே போகாமல் இருக்கும்.

அந்த ஆடையைச் சில குழந்தைகள் உண்பதில்லை. அதுவும் தவறு. அதிலுள்ள ஊன் சத்துத்தான் அதிக

கு—8