பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கேள்வியும்

சுலபமாக சீரணமாகக் கூடியது. அதனால் அதைக் குழந்தைகள் அதிகமாக உண்பது அவர்களுடைய ஆரோக்யத்துக்கும் வளர்ச்சிக்கும் அவசியமாகும்.

175 அப்பா! தீக்குச்சியைக் கிழித்து ஜலத்தில் போட்டால் அணைந்துவிடுகிறது, மண்ணெண்ணெய்யில் போட்டால் மண் ணெண்ணெய்யும் சேர்ந்து எரிகிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஹைட்ரோஜன் என்னும் வாயு எரிந்து அதாவது பிராண வாயுவோடு சேர்ந்து ஜலம் உண்டாகிறது. அதனால் ஜலமானது பிராண வாயுவோடு சேர்ந்து எரியமுடியாது. அதோடு தீக்குச்சி எரிவதற்கு வேண்டிய பிராண வாயு ஜலத்தில் இல்லை. அதில் கொஞ்சம் காற்றுக் கரைந்திருப்பது உண்மைதான். ஆனால் அந்தக் காற்றை மீன்கள் உபயோகித்துக் கொள்ளமுடியும். தீக்குச்சி உபயோகித்துக் கொள்ள முடியாது. அதுவும் தவிர ஜலத்துக்கு உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்ளும் சக்தி அதிகம். அதனாலும் தீக்குச்சி அணைந்து போகிறது.

ஆனால் மண்ணெண்ணெய் என்பது ஹைட்ரோஜனும் கரியும் சேர்ந்ததாகும். அவை ஒவ்வொன்றும் பிராண வாயு வோடு சேரக்காத்திருக்கும் வஸ்துக்கள். அவைகளுக்கு உஷ்ணம் ஏற்பட வேண்டியதுதான் தாமதம், உடனே எரிய ஆரம்பித்துவிடும். அதனால் தீக்குச்சியைக் கிழித்து மண்ணெண்ணெய்யில் போட்டால் அது எரிவதற்கு வேண்டிய உஷ்ணம் கிடைத்து விடுகிறது. அதனால் மண்ணெண்ணெய் சுடர்விட்டுஎரிய ஆரம்பித்து விடுகிறது. அந்தக் காரணத்தால் நாம் போட்ட தீக்குச்சியும் அணையாமல் எரிகின்றது.

176 அப்பா! ஊசியை உறைத்துக் கன்னத்தில் வைத்தால் உஷ்ணமாய் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! இரண்டு வஸ்துக்கள் உராய்ந்தால் எப்பொழுதும் உஷ்ணம் உண்டாகும். காட்டில் மூங்கில்கள் உராய்ந்து