பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கேள்வியும்

நாம் வைக்கோல் போர் போடுவதுபோல, சில தேசங்களில் புல்லைக் காயவைத்துப் போர் போடுவார்கள். அதிலும் ஒருவித வாயு உண்டாகித் தானே நெருப்புப் பற்றிக் கொள்வதுண்டு. அப்பொழுது புல் போரும் எரிந்து போகும்.

178 அப்பா! சூரியன் அபாரமான உஷ்ணம் என்று கூறுகிறார்களே, அதுபோல் உஷ்ணம் உண்டாக்க முடியுமா?

தம்பி! ஆமாம், சூரியன் மகா உஷ்ணமாகத்தான் இருக்கிறது. சாதாரணமாக நாம் ஜலத்தைக் கொதிக்க வைத்தால் உஷணம் 100 டிகிரிதான். அதுவே நம்மால் தாங்க முடியவில்லை. கைபட்டால் கொப்பளித்தும் போகிறது. ஆனால், சூரியனுடைய உஷ்ணமோ 650 டிகிரி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அது எவ்வளவு அதிகமான உஷ்ணம் என்று எண்ணக்கூ முடியவில்லை அல்லவா?

நாம் சாதாரணமாக உண்டாக்கும் நெருப்பு எல்லாம் 400 அல்லது 500 டிகிரிக்கு மேல் போகாது. கியாஸ்லைட் தான் 1:00 டிகிரி என்று கூறுகிறார்கள். ஆனால், ஸர் ஹம்ப்ரிடேவி என்பவர் மின்சார விளக்கு கண்டுபிடித்தார். அதன் மூலமாக இப்பொழுது அமைக்கப்பெறும் மின்சார அடுபபில் 4000 டிக்கிரி உஷ்ணம் காணப்படுகிறது. அதன் சுடரை "மின்சார சூரியன்" என்று கூறுகிறார்கள். இதற்கு அதிகமான உஷ்ணத்தை உண்டாக்கும் காலமும் ஏற்படலாம்.

179 அப்பா! அதிக உஷ்ணமான நாட்களில் வஸ்துக்கள் அசைவது போலத் தெரிகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வஸ்துக்கள் எதுவும் அசைவதில்லை. அசைவது போல் தெரிவதற்குக் காரணம் காற்றும் காற்றிலுள்ள நீராவியும் உஷ்ணத்தால் விரிந்து மாறுபடுவதேயாகும்.