பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

117

ஒளியானது எதனோடு வந்தாலும் சரி, அந்த வஸ்து ஒரே அடர்த்தியாய் இருந்தால் நேராக வந்து சேரும். அடர்த்தி மாறுபட்டால் நேராக வராமல் வளைந்துதான் வரும். அதிக உஷ்ணமான நாட்களில் காற்றின் அடுக்குகள் பல விதமான அடர்த்தி உடையவைகளாய் இருக்கும். அதனால் வஸ்துக்களிலிருந்து வரும் ஒளி இப்படியும் அப்படியும் வளைந்து வளைந்தே நம்முடைய கண்களுக்கு வந்து சேர்கிறது. அதனால்தான் வஸ்துக்கள் அசைவதுபோலத் தோன்றுகின்றன.

180 அப்பா! தீக்குச்சியைக் கிழித்து தலைகீழாகப் பிடித்தால் மட்டுமே நன்றாக எரிகிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! தீக்குச்சியிலும் தீ எரிகிறது. விளக்கிலும் தீ எரிகிறது. இரண்டும் ஒரே மாதிரிதான் என்று எண்ணி விடாதே. விளக்கில் அடியிலுள்ள எண்ணெய் திரியில் ஏறி ஆவியாக மாறி எரிகிறது. எண்ணெய் உள்ளவரை திரியில் ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் விளக்கில் திரி மேல்நோக்கி இருந்தாலும் அணையாமல் எரிகின்றது. ஆனால் தீக்குச்சியில் மரக்குச்சிதான் எரிகிறது. அதனால் அதைக் கிழித்து நேராகப் பிடித்தால், சுடர் மேல் நோக்கி எரிகிறது; மரம் கீழே இருக்கிறது; சுடர்க்குப் போதிய மரம் கிடைப்பதில்லை. அதனால் சீக்கிரமாக அணைந்து போகிறது.

ஆனால் தீக்குச்சியைக் கிழித்துத் தலைகீழாகப் பிடித் தால், அப்பொழுது சுடர் மேல்நோக்கியே எரிகிறது. அதனால் அதற்குப் போதுமான மரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆதலால்தான் அப்பொழுது அணைந்து போகாமல் நன்றாக எரிகிறது.

181 அப்பா! மண் பானைகளைச் சுடுகிறார்களாமே, அதற்குக் காரணம் என்ன?