பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

119

பற்றி ஒன்றும் தெரியாது. அதன் மூலமாக ஒளி அதிர்ச்சி நம் கண்ணுக்கு வந்து எட்டுகிறது என்பது மட்டும்தான் தெரியும். அவ்விதம் வரும் அதிர்ச்சி கண்ணில் சேர்ந்ததும், அந்த விஷயம் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. நாம் ஒளி உணர்ச்சி அடைகிறோம்.

183 அப்பா! இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எதையாவது பார்க்கிறோம் என்றால் அதன் அர்த்தம் என்ன? அந்த வஸ்துவின்மீது பட்ட ஒளி நமது கண்ணுக்கு வந்து சேர்கிறது. அதை அறியக்கூடிய சக்தி நம்முடைய கண்ணில் இருக்கிறது என்று அர்த்தமாகும். ஆகவே, நமது கண்கள் பழுதில்லாமல் இருந்தாலும், வஸ்துவிடமிருந்து ஒளிவராவிட்டால், அதாவது வெளியே வெளிச்சம் இல்லாவிட்டால் நாம் அந்த வஸ்துவைப் பார்க்க முடியாது. அதுபோலவே வெளிச்சம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நமது கண்களுக்குப் பார்க்கும் சக்தியில்லாமல் இருந்தால் அப்பொழுதும் நாம் அந்த வஸ்துவைப் பார்க்க முடியாது. ஆகவே, வெளிச்சமில்லா விட்டாலும் நமக்கு இருட்டுத்தான், கண்கள் குருடாயிருந்தாலும் நமக்கு இருட்டுத்தான்.

184 அப்பா! ஆற்றிலே ஆழமில்லாததுபோல் இருக்கிறது, ஆனால் காலை விட்டால் ஆழமாயிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அதுபோல் ஆற்றிலே உன்னுடைய சோப் தவறி விழுந்துவிட்டாவ் அது எங்கே கிடப்பதுபோல் தோன்றுகிறது? ஜலத்துக்குக் கீழே சமீபத்தில் கிடப்பது போல் இருக்கும். ஆனால், கையை விட்டால் எடுக்க முடியாது. அதிக ஆழத்தில் கிடக்கும். இதற்குக் காரணம் என்ன?