பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கேள்வியும்

தம்பி! ஒரு வஸ்துவை எப்படிப் பார்க்கிறோம்? அதன் மீது படும் ஒளி நம் கண்களுக்கு வந்ததும்தான் பார்க்கிறோம். அதுபோல் ஜலத்துக்குள் விழுந்துவிட்ட சோப்பிலிருந்து ஒளி நம் கண்களுக்கு வந்து சேர்கிறது. அதைப் பார்க்கிறோம். ஆனால், அந்த ஒளி எப்படி வந்து சேருகிறது தெரியுமா?

ஜலம் இல்லாலிட்டால் அந்த ஒளி காற்றூடு மட்டுமே வரும். அதனால் நேராக ஒரே கோடுபோல் வந்துவிடும். ஆனால் ஜலம் இருப்பதால் அந்த ஒளியானது ஜலம் மட்டம் வரை ஒரு கோடுபோல் வந்து, அதன்பின் ஜல மட்டத்தின் பக்கமாகச் சாய்ந்து ஒரே கோடாக நம்முடைய கண்களுக்கு வந்து சேர்கிறது. அதாவது ஒளியானது ஒரேவித வஸ்துவில் வந்தால் ஒரே கோடாக வரும்; ஒரு வஸ்துவிலிருந்து மற்றொரு வஸ்துவுக்குள் நுழைவதாயிருந்தால் சாய்ந்துதான் வரும்.

சோப்பிலிருந்து வெளிச்சம் நம்முடைய கண்களுக்கு வந்து சேர்கிறது. ஆனால், நம்முடைய கண்கள் அந்த வெளிச்சம் கடைசியாக வந்த கோட்டின் வழியாகவே அந்த சோப்பைப் பார்க்க முடியும். அதனால்தான் சோப் ஆழத்தில் கிடந்தாலும் மேலே கிடப்பதுபோல் தோன்றுகிறது.

185 அப்பா! கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது. கட்டை மூலம் பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒவ்வொரு வஸ்துவும் ஒரு பிண்டமான வஸ்துவன்று. ஆயிரக்கணக்கான அணுக்சளின் கூட்டமேயாகும். அந்த அணுக்கள் சில வஸ்துக்களில் நெருங்கியிருக்கும். சில வஸ்துக்களில் நெருக்கமாக இரா. அதிக நெருக்கமாயிருந்தால் அவற்றின் இடையே ஒளி நுழைய முடியாது. அத்தகைய வஸ்துதான் மரக்கட்டை. அதனால்தான் அதன் .