பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கேள்வியும்


ஒளியைத் தடுத்துவிடுகிறது. ஆனால் அந்தக் கண்ணாடியில் நம் முகம் தெரிவதற்கு அந்தப் பலகை இருந்தால் மட்டும் போதாது. அந்தப் பலகை வழவழப்பாய் இல்லாததால் அதில் படும் ஒளி சிதறிப் போகிறது; அதில் பட்டபடியே திரும்பவும் நம் கண்களுக்கு வந்து சேர்ந்து நம்முகம் தெரியும்படி செய்வதில்லை. அதற்காகக் கண்ணாடியின் பின்புறம் பாதரசத்தைப் பூசி வைக்கிறார்கள். அது ஒளியைத் தடுக்கவும் செய்கிறது, அதைச் சிதறிப் போகாமலும் பார்த்துக்கொள்கிறது. அதே காரணத்தினால்தான் நம் முகம் நிலைக்கண்ணாடியில் தெரிகிறது. அதே காரணத்தினால் தான் அசையாமல் நிற்கும் ஜலத்திலும் வழவழப்பான பலகை, பாத்திரம், சுவர் முதலியவைகளிலும் நம்முடைய முகம் தெரிகிறது.

187 அப்பா! அநேக விதமான நிறங்கள் தெரிகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஈதர் என்று ஒன்று எங்கும் பரவி நிற்கின்றது என்றும், அதில் உண்டாகும் அலைகள் நம் கண்ணில் வந்து

சேர்வதால்தான் நமக்கு ஒளி உணர்ச்சி உண்டாகின்றது என்றும அறிவாய். அந்த அலைகள் சிறியவைகளாகவும் பெரியவைகளாகவும் இருக்கின்றன. அவ்விதம் உண்டாகும் சிறிய அலைகள் பெரிய அலைகள் எல்லாம் நம்மிடம் ஒளி உணர்ச்சி உண்டாக்குவதில்லை. சில சிறிய அலைகளும் சில பெரிய அலைகளும் தான்