பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

123

உண்டாக்குகின்றன. அவற்றுள் மிகச் சிறிய அலைகள் சிவப்பு நிற உணர்ச்சியையும் மிகப் பெரிய அலைகள் ஊதா நிற உணர்ச்சியையும் தருகின்றன. அவற்றிற்கு இடையில் தான் நாம் காணும் இதர நிறங்கள் எல்லாம். சிவப்பு அலைகளைவிடச் சிறிய அலைகளும் ஊதா அலைகளைவிடப் பெரிய அலைகளும் நிற அலைகள்தான். ஆனால் அவைகளைக் காண நம் கண்களுக்குச் சக்தியில்லை. அதனால் உலகில் எத்தனை நிறங்கள் உள என்றால் அநந்தம் கோடி என்று கூறலாம். ஆனால் நமக்குத் தெரியும் நிறங்கள் எத்தனை?

சூரியனுடைய ஒளி லெள்ளையாகத் தெரிகிறது. அதை மூன்று பட்டையுள்ள சரலாந்தர்க் கண்ணாடி வழியாக அனுப்பினால், அது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்களாகப் பிரிந்து தோன்றும். ஆயினும் நன்றாகக் கவனித்தால் இவற்றுள் ஊதா, பச்சை, சிவப்பு மூன்று தான் கலப்பற்ற நிறங்கள் என்று அறியலாம். இதர நிறங்கள் எல்லாம் இந்த மூன்று நிறங்கள் பலவிதமாகச் சேர்வதாலேயே உண்டாகின்றன. அதனால் இந்த மூன்று நிறங்களையும் "மூல நிறங்கள்" என்று கூறுவார்கள். ஆகவே உலகில் அநந்தம் கோடி நிறங்கள் இருந்தாலும் மனிதன் அறியக் கூடியவை மூன்று தான். நமக்குக் கண்கள் இல்லையானால் இந்த மூன்று நிறங்கள் கூடத் தெரியாது; எல்லாம் ஒரே இருள் மயம் தான்.

188 அப்பா! வஸ்துக்கள் வேறு வேறு நிறமாகத் தெரிகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம். சில சிவப்பாகவும், சில பச்சையாகவும், சில வெள்ளையாகவும், சில கறுப்பாகவும் இவ்விதம் பல நிறங்களாகத் தெரிகின்றன. தம்பி! வஸ்துக்களைத் தானாக ஒளி விடுபவை என்றும் தானாக ஒளி விடாதவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். விளக்கு சுடர் தானாக