பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

125

என்ன என்று கேட்டால் அது யார்க்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கிறது.

189 அப்பா! சுறுப்பு உடை உஷ்ணம், வெள்ளை உடை உஷ்ணமில்லை என்று கூறுகிறார்களே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கறுப்பு என்றால் என்ன? வெள்ளை என்றால் என்ன? சூரியனுடைய ஒளி வெண்மையாகத் தெரிகிறது. ஆனால் அதில் ஏழு நிற ஒளிகள் சேர்ந்து இருக்கின்றன. அவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான் வெள்ளையாகத் தெரிகிறது. அந்த ஒளி தன்மீது பட்டால் அதை அப்படியே நமக்கு அனுப்பும் வஸ்து வெள்ளையாகத் தெரியும். அந்த ஒளியில் ஏதேனும் ஒரு நிற ஒளியை அனுப்புமானால் அந்த நிறமாகத் தெரியும். அந்த ஒளி முழுவதையும் சாப்பிட்டுவிடுமானால் அப்பொழுது கறுப்பாகத் தெரியும்.

ஆகவே கறுப்பு உடை சூரியனுடைய உஷ்ணம் முழுவதையும் கிரகித்துக் கொள்கிறது. வெள்ளை உடை அதில் சிறிதும் கிரகித்துக் கொள்வதில்லை. அதனால்தான் கறுப்பு உடை உஷ்ணமாயும் வெள்ளை உடை உஷ்ணமில்லாமலும் இருக்கிறது. ஆதலால் குளிர்காலத்தில் கறுப்பு உடையும் கோடை காலத்தில் வெள்ளை உடையும் அணிவது நல்லது.

190 அப்பா! சிவப்பைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு வெள்ளையைப் பார்த்தால், பச்சையாகத் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வெள்ளை ஒளியில் பல நிறங்கள் உள. அவற்றுள் நீலமும் மஞ்சளும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும். சிவப்பும் பச்சையும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும். அதனால்