பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

127

சூரிய ஒளியில் குளித்தாலும் நிறம் குன்றாமல் அழகாயிருக்கின்றன.

ஆனால் மலர்கள் உதிர்ந்துபோனால், அவற்றிலுள்ள சாயங்கள் மாறுதல் அடைந்து விடுகின்றன. அப்பொழுது மலர்களும் வஸ்திரங்களைப் போலவே நிறம் குன்றி வெளுத்து விடுகின்றன.

192 அப்பா! வெள்ளை வஸ்திரங்களை வெளியிலும் நிற வஸ்திரங்களை வீட்டுக்குள்ளும் உலரப் போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! புஷ்பங்கள் இலைகள் இவற்றின் நிறங்கள் இயற்கையான நிறங்கள். அந்த நிறங்களைச் செடிகள் சதாகாலமும் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் சூரிய ஒளி அவைகளை அதிகத் துலக்கமாகக் காட்டுமேயன்றி அழித்து விடாது. அந்தப் புஷ்பங்களும் இலைகளும் செடியிலிருந்து உதிர்ந்துவிட்ட பின்பே சூரிய ஒளி அவற்றின் நிறங்களை அழிக்க முடியும்.

வஸ்திரங்கள், சமக்காளங்கள், கடுதாசிகள் முதலியவைகளில் காணப்படும் நிறங்கள் நாம் உண்டாக்கியவை. இந்த நிறங்களைச் சூரிய ஒளி அழித்து வெளுப்பாக்கிவிடும். அதனால்தான் நிறவஸ்திரங்களை வெயிலில உலரப் போடக் கூடாது. வெயிலில் உலரப் போட்டால் வெகு சீக்கிரத்தில் வெளுத்துப் போகும். வெள்ளை வஸ்திரங்களை வெயிலில் உலர வைப்பது நல்லது. அதுவும் அதிக ஈரமாகவே போட்டால் சூரிய ஒளி அவைகளை அதிக வெளுப்பாக்கி விடும்.

193 அப்பா! நிழல் உண்டாகிறதே, அதற்குக் கரரணம் என்ன?