பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கேள்வியும்

தம்பி! நான் விளக்கின் முன் நிற்கிறேன் என்று வைத்துக்கொள். விளக்கின் ஒளி என்மீது படுகிறது. ஆனால் கண்ணாடியில் போவதுபோல் என்னூடு செல்வதில்லை. அதனால் என்னுடைய பின்புறத்தில் வெளிச்சமாயிராது. இருட்டாகத்தான் இருக்கும். அதைத்தான் நிழல் என்று கூறுகிறோம். கண்ணாடியின் வழியாக ஒளி செல்லக் கூடியதாயிருப்பதால், கண்ணாடிக்கு நிழல் உண்டாகாது எந்த வஸ்து வழியாக ஒளி செல்லாதோ, அந்த வஸ்துவுக்குத்தான் நிழல் உண்டாகும்.

194 அப்பா? வைரங்கள் பார்ப்பதற்கு ஒரு கண்ணாடி வைத்திருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வைரங்கள் சிறு வஸ்துக்கள், அவற்றில் ஏதேனும் பழுது இருந்தால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. அதைப் பார்ப்பதற்குத்தான் ஒரு விதக் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். அந்தக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால் பழுது இருந்தால் பெரிதாகக் கண்ணுக்குத் தெரியும்.

அந்தக் கண்ணாடி சாதாரணக் கண்ணாடி மாதிரி தட்டையாக இராது. ஓரம் மெல்லியதாகவும் நடுப்பாகம் திண்ணமாகவும் இருக்கும். அந்த மாதிரிக் கண்ணாடிதான் போட்டோ பிடிக்கும் காமிராவில் வைத்திருப்பார்கள். நம்முடைய கண்களும் அதேமாதிரித்தான் இருக்கின்றன. அந்தக் கண்ணாடியைக் கொண்டு இந்த எழுத்துக்களைப் பார்த்தால் பெரியதாகத் தெரியும். அந்த மாதிரிக் கண்ணாடி மூலம்தான் டாக்டர்கள் ரத்தத்தில் நோய்க்கிருமிகள் உண்டா என்று பரிசோதித்துப் பார்க்கிறார்கள். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய வஸ்துக்கள் எல்லாம் இந்தப் பூதக்கண்ணாடி மூலம் பார்த்தால் தெரிந்து விடும். அதுமட்டுமன்று. இந்தக் கண்ணாடியைச் சூரிய ஒளிகளை ஒன்றும் சேர்க்கும்படியும் உடயோகிக்கலாம். அப்படிச்