பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

129


செய்தால் ஒளிக் கிரணங்கள் ஒரு சிறு புள்ளிபோல் தோன்றும். அந்த இடத்தில் நம் கையை வைத்தால் பொசுங்கி விடும். ஒரு கடுதாசியை வைத்தால் தீப்பற்றி விடும்.

195 அப்பா! மின்சார சக்தி என்றால் என்ன?

தம்பி ! ஒரு பழைய பவுண்டன் பேனாவை எடுத்து ரோமத்துணியால் தேய்த்து, காகிதத்தைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்துப்போட்டு, அவற்றின்மீது அந்தப் பேனாவைப் பிடித்தால் காகிதத் துண்டுகள் குதிப்பதைப் பார்க்கலாம். பவுண்டன் பேனாவில் மின்சார சக்தி உண்டாய் விட்டது, அதனால் அது காகிதத் துண்டுகளைத் தன்னிடம் இழுக்கிறது. அதனால்தான் அவை குதிக்கின்றன. இதே போல் ஒரு கண்ணாடித் தடியைப் பட்டுத் துணியால் தேய்த்தால் கண்ணாடித் தடியும் மின்சார சக்தி உடையதாக ஆகி விடுகிறது. இது ஒரு விதமான மின்சார சக்தி.

இன்னும் ஒரு விதமான மின்சார சக்தி 18-ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. அதுதான்

இப்பொழுது பலவிதத்திலும் நமக்கு உபயோகமாக இருந்து வருகிறது, ஒரு கண்ணாடி டம்ளரில் செம்புத் தகடும்துத்த நாகத்தகடும் வேறு வேறாக வைத்து அதில்

கந்தகப் புளிப்பு ஜலம் ஊற்றி,இரண்டு தகடுகளோடு ஒரு கம்பியை இணைத்து வைத்தால், மின்சார சக்தி உண்டாய் விடுகிறது. இதைத்தான் பாட்டரி என்று கூறுகிறார்கள்.

கு—9