பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கேள்வியும்

இதைத்தான் நாம் பாட்டரிவிளக்கு முதலியவைகளுக்கு உபயோகிக்கிறோம் இதைவிட அதிக சக்தியுடைய பாட்டரிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு மின்சாரத்துக்கும் காந்தத்துக்குமுள்ள சம்பந்தம் அறிந்து விட்டதால் பெரிய பெரிய டைனமோக்கள் செய்து மின்சார சக்தியால் அற்புதமான காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

196 அப்பா! காந்த “நிப்" மற்ற “நிப்”களைத் தூக்குகிறதே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! காந்தம் என்பது ஒருவித சக்தி. சின்ன ஆசியா என்னும் தேசத்து மலைகளில் ஒருவிதக் கல் காணப்படுகிறது. அதைக் காந்தக்கல் என்று கூறுவார்கள். அந்தக் கல்லை ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால் அது ஒரே திசையை நோக்கி நிற்கும். அதைக்கொண்டுதான் காம்பஸ் அல்லது வடக்கு நோக்கி என்னும் சாதனத்தைச் செய்து திசை அறிய உபயோகிக்கிறார்கள். அவ்விதம் திசை காட்டுவதோடு அது இரும்பு வஸ்துக்களைத் தன்னிடம் இழுத்துக் கொள்ளவும் செய்யும்.

காந்தக் கல்லுக்குப் பதிலாக இரும்புத் தடியைச் சுற்றி மின்சார சக்தியைப் போகும்படி செய்தால் அப்பொழுது அந்த இரும்பும் காந்த சக்தி உடையதாக ஆகிவிடும். அந்த இரும்புத்தடி உருக்காயிருந்தால் மின்சார சக்தி போவது நின்ற பின்பும் காந்தமாகவே இருக்கும். சாதாரணத் தேனிரும்பாய் இருந்தால் மின்சார சக்தி போகும்வரை தான் காந்தமாயிருக்கும். இந்த விதமான மின்சாரத்தைக் கொண்டு எத்தனையோ மனிதர்கள் செய்யக்கூடியவேலையை எளிதில் செய்து விடலாம். அதுமட்டுமன்று. பல காந்தங்களுக்கு இடையில் ஒரு கம்பிச் சுருளை விரைவாகச் சுற்றினால் அந்தச் சுருளில் மின்சார சக்தி உற்பத்தியாகி விடுகிறது. அதுதான் டைனமோ என்னும் சாதனத்தின்