பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கேள்வியும்


198 அப்பா! டெலிபோனில் பேசுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நான் பேசுகிறேன், நீ கேட்கிறாய். அதாவது நான் காற்றில் சப்த அலைகள் உண்டாக்குகிறேன். அந்த அலைகள் உன் காதில் சேர்ந்ததும் உனக்கு நான் பேசுவது கேட்கிறது. ஆனால் நீ தூரத்தில் இருந்தால் கேட்கவில்லை; ஏனெனில் அந்த அலைகள் அவ்வளவு தூரம் வரை வருவதில்லை.

ஆனால் காற்றைவிட உலோகங்கள் சப்த அலைகளை அதிக தூரம் கொண்டு செல்லும். நீ இந்த வீட்டில் ஒரு தகட்டின் அருகில் உட்கார்ந்துகொள். அடுத்த வீட்டில் உன் நண்பனும் அதே போன்ற ஒரு தகட்டின் அருகில் உட்கார்ந்து கொள்ளட்டும். இரண்டு தகடுகளையும் ஒரு மெல்லிய கம்பியால் இணைத்து வையுங்கள். அதன்பின் நீ உன் தகட்டிடம் பேசினால் உன் நண்பனுக்கு அவனுடைய தகட்டிடம் நீ பேசியது முழுவதும் தெளிவாகக் கேட்கும். நீ பேசியது தகட்டில் அலைகளை உண்டாக்கிற்று. அந்த அலைகளைக் கம்பியானது உன் நண்பனுடைய தகட்டுக்குக் கொண்டுபோய் அங்கிருந்து காற்று மூலம் உன் நண்பனுடைய காதில் சேர்த்துவிட்டது.

ஆனால் உலோகமும் அடுத்த வீட்டுக்குப் பேச உதவுமேயன்றி. வெகு தூரத்துக்குப் பேச உதவாது. காற்று அலைகளை மின்சார அலைகளாக மாற்றிவிட்டால், அவை கம்பிமூலம் வெகுதூரம் விரைவாகச் செல்லும். அந்த