பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

133

மின்சார அலைகள் பின்னர் காற்று அலைகளாக மாற்றப்பட்டுக் காதில் போய்ச் சேரும்.

டெலிபோனில் நாம் பேசும் பொழுது நம் பேச்சால் ஒரு தகட்டில் அதிர்ச்சி உண்டாகிறது, அதனால் அருகிலுள்ள கரித் தகட்டிலும் அதிர்ச்சி உண்டாகிறது. அதனால் கரிப் பொடிகளில் மின்சார சக்தி உண்டாகிறது. அதனால் சப்த அலைகள் மின்சார அலைகளாக மாறிவிட்டன. அந்த அலைகள் நண்பர் பக்கம் போய்ச் சேர்கின்றது. அங்கே காந்தத்தில் கம்பிச்சுருள் மாட்டியிருக்கிறது; அதன் வழி செல்லும் மின்சார அலைகள் காந்தத்தின் அருகிலுள்ள தகட்டில் அதிர்ச்சி உண்டாக்குகிறது. அதனால் காற்றில் அலைகள் உண்டாய் நண்பர் காதுக்குப் போய்ச் சேருகிறது: அவருக்கு நாம் பேசியது கேட்கிறது.

199 அப்பா! எலக்டிரிக் பல்பு எண்ணெய்யும் திரியும் இல்லாமல் எரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மின்சார சக்தியானது சில வஸ்துக்கள் மூலமாகச் செல்ல முடியும். சில வஸ்துக்கள் மூலமாகச் செல்ல முடியாது. அப்படி மின்சார சக்தி செல்லக்கூடிய வஸ்துகளும்கூட அதன் ஓட்டத்தை ஓரளவு தடுக்கவே செய்கின்றன. அந்த வஸ்துக்கள் எவ்வளவுக்கவ்வளவு மெல்லியதாய் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்தத் தடை அதிகமாய் விடுகிறது. அப்பொழுது அந்த மெல்லிய வஸ்து உஷ்ணமாகி ஒளிவிட ஆரம்பித்து விடுகிறது.

ஆதியில் கரியை நூல்போலாக்கி, காற்றில்லாமல் செய்த கண்ணாடி பல்புக்குள் வைத்து, அதன் வழியாக மின்சார சக்தியை அனுப்பினார்கள். அப்பொழுது அந்தக் கரிநூல் வெண்ணிறமான ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

அதன்பின் "டங்ஸ்டன்" என்னும் உலோகத்தால் செய்த கம்பி அதைவிட அதிகப பிரகாசம் தருவதை அறிந்தார்கள். அதோடு, பிராணவாயுவோடு சேராத நைட்ரோஜன் போன்ற வாயுக்கள் பலபில் இருக்குமானால் பிரகாசம் இரண்டு மடங்கு அதிகமாவதாகக் கண்டார்கள்.