பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கேள்வியும்

அவைகளைக் கண்டு பின்னால் வரும் வண்டிகள் காரின் மீது மோதிவிடாமல் விலகிப்போகும்.

203 அப்பா! ரோட்டில் இடது பக்கமாகப் போகவேண்டும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ரோட்டில் போகும்பொழுது ஏதேனும் ஒரு ஒழுங்கு முறையை அனுஷ்டிப்பது நல்லது. இல்லை யெனில் எல்லாம் ஒரே குழப்பமாய் பலவிதமான அபாயங்கள் ஏற்பட்டுவிடும். அதற்காகத்தான் இடது பக்கமாகப் போகும் ஒழுங்கு முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த விதம் இடது பக்கமாகப் போனால், போவது எல்லாம் ஒரு புறமாகவும் வருவது எல்லாம் ஒரு புறமாகவும் போக்குவரத்து நடைபெறும். அப்பொழுது மோதல் முட்டல் நிகழா, அபாயங்கள் உண்டாகா.

204 அப்பா ரோட்டில் சில இடங்களில் குறுக்கே கம்பு போட்டு இருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ரோட்டில் சௌகர்யமாய்ப் போய்வரவேண்டுமானால், அதில் கல்போட்டு செப்பஞ் செய்ய வேண்டும்; நதிகள் ஓடைகள் ஓடுமிடத்தில் அவற்றின்மீது பாலங்கள் அமைக்கவேண்டும். உஷ்ணம் அதிகமாகத் தெரியாமல் இருப்பதற்காக ஓரங்களில் மரங்கள் வைத்து வளர்க்சு வேண்டும். இந்தக் காரியங்கள் செய்வதற்குப் பணம் வேண்டும். அதற்காகத்தான் சுங்கச்சாவடிகள் ஏற்படுத்துகிறார்கள். அங்கே ரோட்டில் கம்பு போட்டு வைப்பார்கள். அந்த இடத்தில் வண்டிகளை நிறுத்திச் சுங்கப் பணங் கொடுத்தால்தான் கம்புகளை எடுத்து வண்டிகளைப் போகச் சம்மதிப்பார்கள்.

205 அப்பா! ரோட்டில் எப்பொழுதும் நடுவில் உயரமாய் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?