பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

137

தம்பி! அப்படி நடுவில் உயரமாய் இருந்தால்தான் மழை பெய்யும் பொழுது ஜலம் இரண்டு பச்கமும் வழிந்து ஓடிவிடும. அப்படியில்லாவிட்டால் ஜலம் வழிந்துபோகாமல் ரோட்டிலேயே தங்கி நிற்கும். அப்பொழுது ஜனங்கள் நடக்கக் கஷ்டமாயிருக்கும். வண்டிகள் போனால், அருகில் நடக்கும் ஜனங்களின்மீது ஜலத்தை வாரி இறைக்கும். ரோடும் சீக்கிரத்தில் குண்டும் குழியுமாய்விடும். ஆயினும் ரோட்டின் நடுவில் அதிக உயரமாய் இருக்கும் என்று எண்ணாதே. அறுபது அடி அகலமுள்ள ரோட்டில் ஐந்து அங்குலம்தான் உயரமாக்குவார்கள். அதிக உயரமாக இருந்தால் வண்டிகள் ஓரமாகப் போகமுடியாது, நடுவிலே தான் போகமுடியும். அதனாலும் ரோடு பழுதாய்ப் போகும்.

209 அப்பா! வண்டிச் சக்கரங்களில் மை போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், எண்டிச் சக்கரத்தில் நடுவில் குடம் இருக்கிறது. அதன் நடுவிலுள்ள துவாரத்தில் ஒரு சிறு இரும்புக் குழாய் இருக்கிறது. அந்தக் குழாய்க்குள் தான் வண்டியின் அச்சுச் சொருகப்பட்டு வெளிப்புறத்தில் சாவி போடப்படுகிறது. அந்த அச்சும் இரும்பினால்தான் செய்யப்படுகிறது.

வண்டி ஓடும்பொழுது அச்சுக் கம்பியும் இரும்புக் குழாயும் உராய்கின்றன. அப்படி உராய்வதால் அவை தேய்ந்து போகும், அதோடு சக்கரங்களும் சுலபமாக உருளமாட்டா, அதற்காகத்தான் அந்த இரும்புக் குழாய்க்குள் மை அதாவது வைக்கோலைச் சுட்டுக் கரியாக்கி எண்ணெய்யுடன் கலந்து போடுகிறார்கள். எண்ணெய் மட்டும் போட்டால் போதாது. அது வழிந்து போகும். சீக்கிரம் உலர்ந்துவிடவும் செய்யும், அதனால்தான்