பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கேள்வியும்

வைக்கோற் கரியுடன் சேர்த்துப்போடுகிறார்கள். அந்த மையைப் போடுவதால் அச்சும் தேயாது, வண்டியும் நன்றாக ஓடும்.

மோட்டார், சைக்கிள் போன்ற வண்டிகளில் இந்த மையைப் போடாமல், சிறுசிறு எஃகு உருண்டைகளைப் போட்டு எண்ணெயிடுவார்கள். அப்படிச் செய்வதால் மாட்டுவண்டி குதிரைவண்டி அச்சுத் தேயுமளவுகூடத் தேயாது. சக்கரங்கள் அதிக விரைவாகச் சுழலவும் முடியும். எந்த யந்திரமானாலும் சக்கரங்கள் சுழல்வதானால் இதேபோல்தான் செய்வார்கள்.

207 அப்பா! சக்கரங்களுக்கு வெளியே ஆணியும் வளையமும் மாட்டியிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வண்டியின் கூண்டு ஒரு கட்டைமீதோ அல்லது இரண்டு விற்கள் மீதோ தங்குகிறது. அந்தக் கட்டை அல்லது விற்களின் அடியில் ஒரு அச்சுக் கம்பி இருக்கிறது. அந்த அச்சுக் கம்பியின் ஒரு நுனி ஒரு சக்கரத்துக்குள்ளும், அடுத்த நுனி ஒரு சக்கரத்துக்குள்ளும் நுழைந்திருக்கின்றன. சக்கரங்கள் சுழல்வதால் அச்சுக் கம்பியோடு பிணைத்திருக்கும் வண்டி ஓடுகிறது.

ஆனால் அப்படிச் சக்கரங்கள் சுழலும்போது, அவை அச்சிலிருந்து விலகிப்போகலாம். அப்படி விலகிப் போனால் வண்டி கீழே விழுந்துவிடும். அப்படி விலகிப் போகாமல் இருப்பதற்காகத்தான் அச்சுக்கம்பியின் நுனிகளில் துவாரம் செய்து ஆணி போட்டிருக்கிறார்கள். அந்த ஆணியை யாரேனும் சுழற்றிவிடாமல் இருப்பதற்காக அதில் வளையங்கள் போட்டு வைக்கிறார்கள். இவ்விதம் போட்டு வைக்கும் ஆணியைத்தான் அச்சாணி என்றும் வண்டிச் சாவி என்றும் கூறுவார்கள்.

208 அப்பா! வில்வண்டி என்றும் கட்டைவண்டி என்றும் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?