பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

141

தம்பி! மாட்டின் கழுத்து வண்டிப் பாரம் முழுவதையும் தாங்கக்கூடிய பலமுடையது; நுகம் அழுத்தினாலும் எளிதில் பழுதாய்விடாத தடித்த தோலுடையது. அதனால் தான் மாடு வண்டியைக் கழுத்தின்மீது வைத்து இழுக்கிறது.

ஆனால் குதிரையின் கழுத்து அப்படிப்பட்ட தன்று. அதற்கு அதன் நெஞ்சுதான் பலமுடையது. அதனால் குதிரை, வண்டியைக் கழுத்தின் மீது வைத்து இழுக்சாமல், நெஞ்சினால் தள்ளிக் கொண்டு போகிறது.

212 அப்பா குதிரையை வண்டியில் பூட்டியிருக்கும் பொழுது அதன் கண்களை இரு பக்கமும் மறைத்து வைக்கிறார்களே, காரணம் என்ன?

தம்பி! அந்த மாதிரி மறைப்பதால் அது பக்கவாட்டத்தில் பார்க்க முடியாது. நேரேதான் பார்க்க முடியும். அதனால் அது தன்னைப் பயப்படுத்தக் கூடிய விஷயங்களைப் பாராமல் ஒழுங்காக ஓடும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அந்தப் பாதுகாவல் அதற்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகம். பயப்படுத்தக்கூடிய விஷயங்கள எதிரில் நடக்காதா? அவற்றைப் பார்த்து பயப்படாதா? பக்கவாட்டத் தில் நிகழும் பயப்படுத்தக் கூடிய விஷயங்களைப் பார்க்கா திருந்தாலும், அவற்றால் உண்டாகும் பயங்கரமான சப்தங்களைக் கேட்டு பயப்பட்டு விடாதா? ஆதலால் இப்பொழுது அறிவாளிகள் குதிரையின் கண்களை மறைப்பது அனாவசியம் என்று எண்ணுகிறார்கள்.

213 அப்பா! குதிரைக்கு வாயில் கடிவாளமும் மாட்டுக்கு மூக்கில் கயிறும் போடுகிறார்கள், அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மாடானாலும் குதிரையானாலும், வண்டியில் பூட்டினால் அதை நாம் விரும்பும் பக்கம் திரும்பிப்