பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கேள்வியும்

போகவும் செய்யவேண்டும்; அது நம்மை மீறிப் போகாமல் தடுத்துக்கொள்ளவும் வேண்டும். அதற்காகத்தான் குதிரைக்குக் கடிவாளமும் மாட்டுக்குக் கயிறும போடுகிறார்கள். நாம் இழுத்தால் நோவுவதாய் இருந்தால்தான் நமக்கு அடங்கி நடக்கும். ஆனால் அதிக நோவு உண்டாய், புண்ணாகாதபடி பலமுள்ளதோலாக இருக்கவும்வேண்டும். அத்தகைய உறுப்பு மாட்டில் மூக்கு; குதிரையில் வாய். அதனால்தான் குதிரையின் வாயில் கடிவாளத்தையும், மாட்டின் மூக்கில் கயிற்றையும் மாட்டி வைக்கிறார்கள்.


214 அப்பா! காளைக்கும் குதிரைக்கும் லாடம் அடிக்கிறார்கள், ஆட்டுக்கும் பசுவுக்கும் அடிக்கிறதில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! காளைக்கும் குதிரைக்கும் கால்களில் குளம்பு இருப்பது போலவே, ஆட்டுக்கும் பசுவுக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் ஆடும் பசுவும் வீட்டில் இருக்கும், அல்லது அருகிலுள்ள வயல்களிலும் காடுகளிலும் போய் மேயும். அவை ரோடுகளில் அதிகமாய் போவதில்லை. ஆனால் காளையும் குதிரையும் வண்டிகளை ரோடுகளில் இழுத்துச் செல்கின்றன. ரோடுகள் கல்லால் செய்யப் படுகின்றன. அதனால் அவற்றில் ஓடும் பொழுது குளம்பு தேய்ந்து போகும். அப்படித் தேய்ந்துபோகாமல் இருப்ப தற்காக அவைகளின் குளம்பில் லாடம் அடிக்கிறார்கள்.

215 அப்பா! சாட்டைக் கம்பில் ஒரு சிறு ஆணி இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மாடு விரைவாகப் போவதற்காக வண்டிக்காரர்கள் சாட்டையைக் கொண்டு அடிக்கிறார்கள். அப்படி விரைவாகப் போவதும் போதாது என்று எண்ணுகிறவர்கள் சாட்டைக் கம்பியிலுள்ள ஆணியால் குத்துவார்கள். அந்த ஆணியைத் தார் என்று கூறுவார்கள்.