பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

145

ஆதலால் ரயில் விரைவாக ஓடும்பொழுது அதை வேறு திசையில் திருப்புவது கஷ்டம். அதனால்தான் வளைவு வரும் பொழுது, ரயிலின் வேகத்தைக் குறைத்து மெதுவாசு ஓட்டுகிறார்கள். அதோடு அந்த வளைவின் வெளிப்புறமுள்ள தண்டவாளத்தைச் சிறிது உயர்த்தி வைக்கிறார்கள். ஆதலால் வண்டி தண்டவாளங்களை விட்டு இறங்கிவிடாமல் இருக்கிறது. வண்டியின் ஓட்டத்தால் வண்டி அதிகமாகச் சாய்ந்து கீழே விழுந்து விடாமலும் இருக்கிறது.

219 அப்பா! ரயிலில் போகும்பொழுது தந்திக்கம்பிகள் ஏறுவதும் இறங்குவதுமாகத் தோன்றுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி? தந்திக்கம்பியைத் தூண்களில் எவ்வாறு இறுக்கமாக இழுத்துக் கட்டினாலும் இடையில் சிறிது தொய்வாகவே இருக்கும். ஆயினும் கொஞ்ச தூரத்தில் நின்று பார்த்தால் அது தொய்வாய் இருப்பதாகத் தோன்றாது. சமதளமாக இருப்பதாகவே தோன்றும். ஆனால் ரயிலில் போகும்பொழுது வண்டி அதிக வேகமாக ஒடுகிறது. அதனால் தொய்வு கண்ணுக்குத் தெரிகிறது. ஆதலால் தூணின் அருகில் உயாந்தும், இடையில் தாழ்ந்தும் தோன்றுகிறது. அதைத்தான் நாம் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம்.

220 அப்பா! ரயில் போகும்பொழுது அதன் புகை எதிர்த் திசை நோக்கிப் பறக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ரயில் ஓடும்பொழுது அதன் முன்னுள்ள காற்று வெள்ளம் அதைத் தடுக்கிறது. ஆனால் ரயில் அதிக பலத்தை உபயோகித்து அந்தக் காற்றை கிழித்துக் கொண்டு ஓடுகிறது. காற்று ரயிலைத் தடுப்பது போலவே அதன் புகையும் தடுக்கிறது; ஆனால் புகையானது ரயிலோடு சேர்ந்து ஓட முடியாமல் ரயிலைவிடக் குறைந்த வேகத்துடன் ஓடுகிறது. அதனால்தான் அது ரயில் போகும் திசைக்கு எதிர்த்திசை

கு—10