பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கேள்வியும்

நோக்கிப் போவதுபோல் தெரிகிறது. ஆனால் உண்மையில் அது ரயில்போகும் திசையிலேயேதான் போகிறது.

தம்பி! சில சமயங்களில் நம்முடைய ரயில் ஓடும் பொழுது அதே திசையை நோக்கி இன்னொரு ரயிலும் ஓடும், ஆனால் அந்த ரயில் மெதுவாக ஓடினால் நமக்கு எதிர்த்திசை நோக்கி ஓடுவது போலவே தெரியும், அதைப் பார்த்திருக்கிறாயா? அதுபோல்தான்.

221 அப்பா! ரயில் திடீரென்று நின்றுவிட்டால் நாம் முன்னால் சாய்ந்து விடுகிறோமே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எந்த வஸ்துவும் அசையாதிருக்குமானால் அதை வேறு ஏதேனும் அசைத்தாலொழிய அப்படியே அசையாமல் இருக்கும். அது அசைந்து கொண்டிருந்தால் அதை வேறு ஏதேனும் தடுத்தாலொழிய அப்படியே அசைந்து கொண்டிருக்கும். இது இயற்கை விதி. இதை நியூட்டன் என்னும் அறிஞர் கண்டுபிடித்ததால் நியூட்டன் விதி என்றும் கூறுவார்கள்.

ரயில் ஓடுகிறது. அது போகும் திசையைப் பார்த்து நாம் அதில் உட்கார்ந்திருக்கிறோம் அதனால் நம்முடைய உடம்பும் ரயிலோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எஞ்சின் நின்றதும் வண்டி நின்றுவிடுகிறது. எஞ்சினானது வண்டி ஓடுவதைத் தடுத்து நிறுத்திவிடுகிறது. ஆனால் அதன்மீது உட்கார்ந்திருக்கும் நம்முடைய உடம்பின் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அதனால் நம்முடைய உடம்பு வண்டி நின்றதும் முன்னால் சாய்ந்து விடுகிறது. அதே காரணத்தால்தான் நாம் உட்கார்ந்திராமல் நின்றுகொண்டிருந்தால் வண்டி நின்றதும் நாம் ஜாக்கிரதையாக இராவிட்டால் கீழே விழுந்து விடுகிறோம்.

222 ரயில்வேத் தண்டவாளங்ளைத் தூரத்தில் பார்த்தால் இரண்டும் ஒன்றுசேர்வதுபோலத் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?