பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

147

ஆமாம். ரயில்வேத் தண்டவாளங்கள் மட்டுமல்ல, வண்டிச்சாலையில் நின்று பார்த்தால் அதன் ஓரங்களும் தூரத்தில் ஒன்று சேர்வது போலத்தான் தெரியும். தம்பி! ஒரு வஸ்து அருகில் இருந்தால் பெரியதாய்த் தெரிகிறது.

ஒரு வஸ்து சிறிது பெரிது என்று நம் கண்கள் எதை வைத்து நிச்சயபடுத்துகிறது? நம் கண்களிலிருந்து அந்த வஸ்துவின் இரண்டு ஓரங்களுக்கும் இரண்டு கோடுகள் கிழித்தால் அவற்றிற்கிடையே உண்டாகும் கோணம் பெரியதாக இருந்தால் அந்த வஸ்து பெரியதாக இருப்பதாக தெரிகிறது. அந்தகோணம் சிறியதாக இருந்தால் அந்த வஸ்து சிறியதாக இருப்பதாகத் தெரிகிறது. வஸ்து அருகில் இருக்குமபொழுது கோணம் பெரிதாக இருக்கும். வஸ்து தொலையில் இருக்கும்பொழுது கோணம் சிறியதாக இருக்கும். அதனால் தான் பக்கத்தில் நின்ற பொழுது பெரியதாகத் தோன்றிய மோட்டார் கார் தொலையில் சென்றதும் ஒரு சிறுபுள்ளி போலத் தெரிகிறது. அதே மாதிரிதான் ரயில் தண்டவாளங்களும் தொலைவில் ஒன்று சேர்ந்து விடுவதுபோலத் தெரிகின்றன.

223 அப்பா! கோடைக் காலத்தில் கூரை வீடு குளிர்ச்சியாய் இருக்கிறதே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஓலைவேய்ந்த கூரையில் அநேக இடைவெளிகள் உள. அவற்றில் காற்று நிறைந்து நிற்கிறது. காற்றுக்கு உஷ்ணத்தை கிரகித்துக் கொள்ளும் சக்தி அற்பம்.