பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கேள்வியும்

அதனால் வேனிற்காலத்தில் வெளியே அதிகமாயிருக்கும் உஷ்ணத்தை உள்ளே இறங்காதபடி ஓலைக் கூரையிலுள்ள காற்று தடுத்து விடுகிறது. அதோடு வீட்டுக்கு உள்ளே மூச்சு விடுவதால் உண்டாகும் உஷ்ணமான வாயுக்கள் கூரையின் இடைவெளியின் மூலம் உடனுக்குடன் வெளியே போய் விடுகிறது. இந்த விதமாக வெளியிலிருந்து உஷ்ணம் உள்ளே வருவதில்லை; உள்ளேயுள்ள உஷ்ணம் வெளியே போய் விடுகிறது. அதனால் தான் ஓலைக் கூரைவீடு குளிர்ச்சியாய் இருக்கிறது.

அதே காரணத்தினால்தான் நாழி ஓட்டுக்கூரை கள்ளி் கோட்டை ஓட்டுக் கூரைபோல் அதிக உஷ்ணமாயிருப்பதில்லை. நாழி ஓடு இரண்டு மூன்றாகச் சேர்த்து வேய்வதால் அதன் இடையில் காற்று நின்று ஒருவாறு உஷ்ணத்தைத் தடுத்து விடுகிறது. ஆனால் கள்ளிக்கோட்டை ஓடு வேய்வதில் அதுபோல் காற்று நிற்க இடைவெளி கிடையாது. அதோடு அந்த ஓடு உஷ்ணமாகி அந்த உஷ்ணத்தை நமக்கு அனுப்பிவிடுகிறது. உள்ளேயுள்ள உஷ்ணத்தை வெளியே போகாதபடி தடுத்தும் விடுகிறது. அதனால் தான் கள்ளிக்கோட்டை ஓடுவேய்ந்த கூரை வீடு அதிக உஷ்ணமாக இருக்கிறது.

224 அப்பா! வீட்டைப் பூட்டியிருந்தாலும் வீட்டில் தூசி ஏறிவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வீட்டைப் பூட்டிவிட்டால் வீட்டுக்குள் காற்று வெளியிலிருந்து வீசாது நின்றுவிடும். அதனால் வெளியிலிருந்து தூசி வந்துசேர மார்க்கமில்லை. ஆனால் வீட்டைப் பூட்டும் பொழுதுள்ள காற்று வீட்டுக்குள் தானே நிற்கும். அந்தக் காற்றில் அதிகத் தூசியிருப்பதாகத் தெரியாது ஆனால் அந்தக் காற்று ஆடாமல் அசையாமல் நிற்பதால் அதிலுள்ள தூசிகள் எல்லாம் மெதுவாகக் கீழே படிந்து விடும். அப்பொழுதுதான் அவை அதிகமாயிருப்பதாகக்